blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 7, 2015

"தோனி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்!!" யுவராஜ் சிங்கின் தந்தை சாபம்!!

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான தோனி ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து காசின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என சக வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் சாபமிடும் வகையில் கருத்து கூறியுள்ளார்.

யோகராஜ்சிங் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார், பேட்டியில் 'தோனியிடம் பெரிய அளவில் கூற விஷயம் ஒன்றும் கிடையாது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஊடகங்கள் தான் தோனி கிரிக்கெட்டின் கடவுள் போன்ற பிம்பத்தை உருவாக்கி வருவதாக கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஒரு காலத்தில் தோனி என்ற ஒருவர் இல்லாத காலம் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஊடகங்கள் முன் தோன்றி, பிரபலமாக வலம் வருகிறார். ஊடகத்தினர் அவரை நிறைய விளம்பரப்படுத்துவதால் அவர் ஊடகங்கள் முன்பு சிரிக்கிறார். அவர் சிரிப்பதால் அவர் ரன் எடுக்கும் போது மக்கள் ஆரவாரமாகின்றனர் என்றார்.

நேர்மையாக சொல்ல வேண்டுமானால் நான் மீடியாகாரனாக இருந்திருந்தால் தோனியை நான் அங்கேயே அறைந்திருப்பேன் என்று அதிரடியாக கூறினார்.

தோனி திமிர் மிக்கவர் என்ற யோக்ராஜ்சிங், இப்படி அகங்காரமாய் திரிந்த ராவணனின் பெருமையும் முடிவிற்கு வந்தது. அதுபோல தோனியின் கதையும் ஒருநாளில் முடியும். தோனியோ ராவணனுக்கும் மேலாக தன்னை எண்ணி கொள்வதாக கூறியுள்ளார் யுவராஜ்சிங்கின் தந்தை.

2011-ம் ஆண்டின் இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தமது மகன் யுவராஜ்சிங் தான் 4-வது வீரராக களமிறங்க தயாரானதாக குறிப்பிட்டார்.

ஆனால் அதை தடுத்த தோனி களமிறங்கி தன்னை ஒரு கதாநாயகனாக முன்னிலைபடுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தன்னை ஒரு ஜாம்பவனாக கருதி கொள்ளும் தோனி, சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏன் வெற்றி தேடி தர முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

பேட்டியின் இறுதியில் தோனி ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து காசின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்.

ஆனால் அப்போது அவருக்கு யாருடைய ஆதரவும் இருக்காது என்று கூறினார். இந்த பேட்டி கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►