blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 7, 2015

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்!

சிலர் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது எழுந்து நடப்பார்கள். பொதுவில் இது 4-8 வயது குழந்தைகளிடம் அதிகம் காணப்படும். என்றாலும், பெரியவர்களுக்கும் காணப்படுகின்றது.

சிலர், நடப்பதோடு மட்டுமில்லாமல் கதவைத் திறந்துக் கொண்டு கூட சென்றுவிடுவர். இது பரம்பரை காரணமாக இருக்கலாம். இரட்டை குழந்தைகளிடம் காணப்படலாம்.

பொதுவில் இது ஆழ்நிலை தூக்கத்திலிருந்து சற்று விழிக்கும் நிலையில் ஏற்படுகின்றது. நடப்பவரின் கண் திறந்திருக்கும்.

நாம் பேசினால் ஏதோ பதில் சொல்லுவார், சொல்ல மாட்டார். திரும்ப அவரை படுக்கைக்கு அழைத்துச் சென்றால் தூங்கி விடுவார். தூக்கத்தில் நடப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

* தூக்கம் பற்றாமை

* தாறுமாறான தூக்க நேரம்

* மன உளைச்சல்

* மது

* சில வகை மருந்துகள் ஆகும்.

மருத்துவ ரீதியாக...

* இருதய துடிப்பில் பிரச்சனை

* ஜூரம்

* நெஞ்செரிச்சல்

* இரவு ஆஸ்த்துமா

* இரவு வலிப்பு

* தூக்கத்தில் மூச்சு விட மறத்தல்

* மனநல பாதிப்பு

* தூக்கத்தில் கால் ஆடிக் கொண்டே இருத்தல் போன்றவை.
பயனுள்ளதாயின் பகிர்ந்துகொள்ளுங்கள் (Share It)

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►