blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 5, 2015

104 வயது தோற்றத்துடன் பரிதாபமாய் இறந்த 17 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் ’ப்ரோகேரியா’ (Progeria) எனப்படும் வயது மூப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹேய்லே ஓகினெஸ் (17) என்ற இளம்பெண் 104 வயது தோற்றத்துடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தெற்கு இங்கிலாந்தின் கிழக்கு சஸ்ஸெக்ஸ் நகரின் அருகேயுள்ள பெக்ஸ்ஹில் பகுதியைச் சேர்ந்த ஹேய்லே ஓகினெஸ் (17), கொடிய நோயான ’ப்ரோகேரியா’ (Progeria) எனப்படும் வயது மூப்பு நோயால் பிறவியில் இருந்தே பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி மனிதர்களைவிட 8 மடங்கு அதிகமாக வயது மூப்பை அடைந்து விடுவார்கள்.

அதாவது, இவர்களுக்கு 10 வயதாகும் போதே 80 வயதை அடைந்தவர்களுக்குரிய உடல் தளர்ச்சியையும், முதுமையையும் அடைந்தது போல தோற்றமளிப்பார்கள்.

மேலும், இந்த நோயினால் தாக்கப்பட்டவர்கள், சராசரியாக 13 வயது வரை மட்டுமே உயிர்வாழ முடியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நோயை குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு, தங்களது கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி ஆய்வு செய்ய தன்னையே ஆய்வுப் பொருளாக ஹேய்லே ஓகினெஸ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், 'காலத்தை கடந்த எனது மூப்பு' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை இவர் புத்தகமாக எழுதியதன் மூலம், ஹேய்லே ஓகினெஸ் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதையடுத்து, உலகளவில் 'ப்ரோகேரியா' தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராகவும் ஹேய்லே ஓகினெஸ் செயல்பட்டு வந்தார்.

இவரது மருத்துவ சிகிச்சைக்கு கருணை மனமும், ஈகை குணமும் கொண்ட பலர் நிதியுதவி அளித்து வந்த நிலையில், தனது 17 வயதில் ஹேய்லே ஓகினெஸ் இயற்கையோடு இணைந்து விட்டதாக இவரது தாயார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹேய்லே ஓகினெஸின் தாயார் கெர்ரி வியாழக்கிழமை அன்று வெளியிட்டுள்ள மரண அறிவிப்பில், என் குழந்தை வேறொரு நல்ல இடம்தேடி சென்றுவிட்டாள்.

இன்றிரவு 9.39 மணியளவில் எனது கரங்களில் சாய்ந்தபடி தனது இறுதி மூச்சை ஹேய்லே ஓகினெஸ் நிறுத்திக் கொண்டாள் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது மரணத்திற்கு பிரபலங்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►