blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, March 4, 2015

இந்தியாவின் சாதனையை பின் தள்ளியது அவுஸ்திரேலியா! சாதனை விபரம்

ausஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்ட அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி செய்து 6 விக்கெட் இழப்புக்கு 417ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.


இது உலக கோப்பை தொடரில் ஒரு அணி அடிக்கும் அதிகபட்ச ஸ்கோராகும்.

முன்னதாக, இந்தியா படைத்திருந்த 413 ரன்கள் என்ற சாதனை இதனால் தகர்க்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் நடுவேயான போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடந்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கன் கேப்டன் முகமது நபி, அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

முதலில் துடுப்பாட்டம் செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்களை குவித்தது.

உலக கோப்பை தொடர்களில், ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்திருந்ததே இதுவரையில் அதிகபட்ச ஸ்கோராக நீடித்து வந்தது. இன்று இந்தியாவிடமிருந்து அந்த சாதனை, அவுஸ்திரேலிய வசமாகியுள்ளது.

சாதனைகள்:
6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள்- அவுஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான்-2015

5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள்-இந்தியா-பெர்முடா-2007

4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள்- தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து-2015

5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள்- தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள்-2015

5 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள்-இலங்கை-கென்யா-1996.


நடப்பு உலக கோப்பையியில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 3 முறை நானூறு ரன்கள் கடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►