blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, March 28, 2015

தேசிய பாடசாலைகளுக்கு 45 கோடி ஒதுக்கீடு!

பெற்றோரிடம் பணம் திரட்டுவதற்கு தடை விதிக்கும் வகையில் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதால் ஒரு மாணவருக்கு 500 ரூபா முதல் 1000 ரூபா வரை
ஒதுக்கும் வகையில் நாடு பூராகவும் உள்ள சகல தேசிய பாடசாலைகளுக்கும் 45 கோடி ரூபா நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நாடுபூராகவும் உள்ள 351 தேசிய பாடசாலைகளுக்கும் இவ்வாறு நிதி வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கொள்கையினடிப்படையில் பாடசாலை கல்வி மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் மாணவர்களுக்கு சுமையேற்ற இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

கல்வி அமைச்சும் நெஸ்லே நிறுவனமும் இணைந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடையே நடத்தும் சிறுவர் மெய்வல்லுநர் நிகழ்ச்சி தொடர்பான ஊடகமாநாடு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் படி பாடசாலை மாணவர்களில் 15 வீதமானவர்களே விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். விளையாட்டு இல்லாததாலே மாணவர்கள் பல்வேறு உடல், உளரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

பழைய முறைகளை மாற்றி நவீன முறையில் கல்வி புகட்டும் முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும். கல்விக்காக ஒதுக்கப்படும் 1.8 வீதத்தை 6 வீதமாக கட்டம் கட்டமாக உயர்த்த இருக்கிறோம்.

அடுத்த வரவு செலவுத் திட்டம் முதல் கல்விக்கு ஒதுக்கும் நிதி அதிகரிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►