இந்தப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவிக்கு, உடல்கல்வி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பேட்டராயணபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று காலை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை கைது செய்யும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்தது வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டகாரர்கள் சமாதானம் ஆகவில்லை.
அப்போது பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் தப்பி செல்வதற்கு முயற்சித்தாகக் கூறப்படுகிறது. ஆனால் விடாமல் துரத்தி சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அவர் பலத்த காயம் அடைந்தார்..
No comments:
Post a Comment
Leave A Reply