7 வது முறையாக ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கியது. வன்முறை ஏதும் நடக்காமல் தடுக்க ராணுவும் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அருகே பருத்தித்துறை நாவலடி ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் கையெறி குண்டுகள் வீசப்பட்டது இதில் யாரும் காயம் அடையவில்லை.
மன்னார் பகுதியில் சில அரசியல் கட்சியினர் மறியல் நடத்தியதால், அங்கு ஓட்டு பதிவு தாமதமானது.

மஹிந்த ராஜபக்சவுக்கு குறிப்பிட்டு சொல்லும் படியான அதிருப்தி , எதிர்ப்புக்கள் எதிராக இல்லையென்றாலும் பொது வேட்பாளர் என அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர் கடும் போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது.
3 வது முறை ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு இன்னும் பலர் மத்தியில் நிலவுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply