'ரிசாத் பதியூதீனும் ரவூப் ஹக்கீமும் நம்பிக்கைத் துரோகிகள் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்'.
யார் அரசாங்கத்தைவிட்டுச் சென்றாலும் மஹிந்ததான் ஜனாதிபதி என கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில:
30வருட கால யுத்தத்திலிருந்து இந்நாட்டை மீட்டெடுத்து நாட்டுமக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகுத்தவர் ஜனாதிபதி.
அது மட்டுமல்லாமல் நாட்டில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் சகல பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்தவர்.
அப்படிப்பட்டவரை விட்டுவிட்டு தமது சொந்த சுயநலன்களுக்காக கட்சியைவிட்டுச் சென்ற மைத்திரிக்குப் பின்னால் யாரும் செல்வார்களா?
யார் சென்றாலும் பரவாயில்லை. றிசாத்தும் ஹக்கீமும் சென்றிருக்கவே கூடாது. அவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. முஸ்லிம்கள் அரசியலை நன்கு படித்தவர்கள். அவர்கள் செல்லும் திசையெல்லாம் மக்களும் செல்வார்களென்று எதிர்பார்ப்பது மகா தவறு.
இனிமேலாவது மக்களுக்காக அரசியல் செய்பவர்களை மக்கள் இனங்கண்டு வாக்களிக்கவேண்டும். இன்றேல் தேர்தல் காலத்தில்மட்டும் வருவார்கள். பின்னர் அவர்களை கொழும்பு சென்றுதான் பார்க்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் சுயநலத்திற்காக கட்சிமாறுவது முறையா? மக்கள் இப்படிப்பட்டவர்களை ஓரங்கட்ட வேண்டும்.
சமுகம் சார்ந்து சேவையாற்ற வேண்டும் என்பது நியாயம்தான். அதற்காக தேசிய ஐக்கியத்திற்கும் இன உறவுக்கும் குந்தகமாக இருக்கும் தனிஅலகுக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா?
மேலும், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதென்பது அம்மக்களின் நியாயமான கோரிக்கையாகும். அதனை பல்லாண்டு காலமாக இழுத்தடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இவர்கள்.
அரசுக்குள்ளிருந்து முட்டுக்கட்டையாக இருந்தவர்களும் இவர்களே. அந்த மக்களின் நியாயமான உரிமைகளை அவர்கள் கேட்டபோது அது இன உறவைப் பாதிக்குமென்று எதிர்த்தவர்கள். இன்று எப்படி தனி அலகு கேட்பது? இது மற்ற மக்களைப் பாதிக்காதா? மக்கள் சிந்திக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்கள் சென்றுள்ள மைத்ரிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பது அம்பாறை மாவட்ட தமிழர்களை, கல்முனைத் தமிழர்களை மீண்டும் புறக்கணிப்பதற்கு ஒப்பானதாகும்.
கடந்த காலத்திலும் கூட்டமைப்பினர் இதைத்தான் செய்தார்கள்.
எனவே அம்பாறை மாவட்ட தமிழர்கள் சிந்தியுங்கள். தமிழருக்கெதிராக செயற்படுபவர்களுக்குப் பின்னால் செல்வது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.
முஸ்லிம் காங்கிரசாரும் தமிழ்க் கூட்டமைப்பினரும் ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் வரலாற்றில் தோல்வியைச் சந்தித்தமையே வரலாறு. அதுதான் இம்முறையும் நடக்கும்.
மாற்றம் என்றால் தற்போதுள்ளது அமைதியான நாடு. இதனை பயங்கரவாத யுகத்திற்குக் கொண்டுபோவதுதான் மாற்றமா? என அவர் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, January 1, 2015
ரிசாத்தும் ஹக்கீமும் நம்பிக்கைத் துரோகிகள்!!!: சாடுகிறார் கல்முனை விகாராதிபதி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply