நிந்தவூர் பிரதேச சபையின் புதிய அலுவலகக் கட்டிடம் நேற்று (31)காலை 9.30 மணியவில் சம்பிரதாய பூர்வமாக பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
நீண்காலமாக மிகவும் பழமை வாய்ந்த கட்டிடத்திலிருந்தே நிந்தவூர் பிரதேச சபை இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் புதிய முயற்சியினால், இக்காரியாலயத்திற்கு சேவை நாடிவருவோரை வினைத்திறனான முறையில் வரவேற்று சேவையினை வழங்க வசதியளிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச மக்களாலும் உத்தியோகத்தர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று கௌரவ தவிசாளரினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டிடத்திறப்பு விழாவில் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.ஏ.நௌஸாட், ஐ.எல்.கலந்தர், எஸ்.எம்.றியாஸ், வை.எல்.சுலைமாலெவ்வை, ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்த மழைகாலத்தில் காரியாலய கடமைகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு இதன் மூலம் வசதியளிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 50 மில்லியன் பெறுமதியான உலக வங்கியின் நிதியளிப்பின் மூலம் தவிசாளர் அவர்களின் பாரிய முயற்சியின கீழ் புற நெகும திட்டத்தினூடாக மிகவும் நவீனமான முறையில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
No comments:
Post a Comment
Leave A Reply