யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது உரையில் பிரபாகரன் என்ற பெயரை கூறியதுமே கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் விண்ணதிரக் கோஷமிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்தார். அதன்போது 'மிஸ்டர் பிரபாகரன்' என்று ஆங்கிலத்தில் விளித்திருந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் உணர்ச்சி பொங்கி கோஷமிட்டனர். அத்துடன் அவரது ஆங்கில உரையின் தமிழாக்கம் செய்யப்பட்டது.
அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று தமிழாக்கம் செய்யப்பட்டதும் அப்போதும் கைதட்டல்களும் , ஆரவாரிப்பும் வானைப்பிளந்தது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியமைக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் பெயர் கேட்டதும் விண்ணதிர கோஷமிட்ட மக்கள்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=332833764931470769#sthash.RHxh6z48.dpuf
பிரபாகரன் பெயர்
கேட்டதும் பரப்புரைக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள்
மகிழ்ச்சியில் ஆரவாரித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
தனது உரையில் பிரபாகரன் என்ற பெயரை கூறியதுமே கூடியிருந்த மக்கள்
மகிழ்ச்சியில் விண்ணதிரக் கோஷமிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்தார். அதன்போது 'மிஸ்டர் பிரபாகரன்' என்று ஆங்கிலத்தில் விளித்திருந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் உணர்ச்சி பொங்கி கோஷமிட்டனர். அத்துடன் அவரது ஆங்கில உரையின் தமிழாக்கம் செய்யப்பட்டது.
அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று தமிழாக்கம் செய்யப்பட்டதும் அப்போதும் கைதட்டல்களும் , ஆரவாரிப்பும் வானைப்பிளந்தது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியமைக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றிகளைத்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply