தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்து கொள்ளவில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் தோப்பில் ஐ.தேக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் பிற்பகல் 5 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய மைத்திரிபால மேலும் தெரிவிக்கையில் - அரசினால் எனக்கெதிராக சேறுபூசும் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன.
நான் யாருடனும் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டவர்களே என்னுடன் இணைந்து கொண்டனர்.
விசேடமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் நான் செய்துகொள்ளவில்லை.
தற்போது ஜனாதிபதி மஹிந்தவிடம் அதிக கோபமும் ஆக்ரோஷமும் காணப்படுவதை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காணக்கூடியதாகவுள்ளது.
இத்தகைய நிலைமையை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஐனாதிபதியிடம் விடுகின்றேன் என்றார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், குமரகுருபரன் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், ராஜித சேனாரத்தின, ரிஷாத் பதியுதீன் மற்றும் பல ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
No comments:
Post a Comment
Leave A Reply