blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, December 31, 2014

'அரசாங்கம் பிழை செய்ததாக மைத்திரி குற்றம் சுமத்தினால் அதற்கான‌ பொறுப்பினை அவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' - மஹிந்த‌


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முட்டாள் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்துள்ளதாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மினுவன்கொடவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி இந்த கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். 2010ம் ஆண்டைப் போன்றே இந்தத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முட்டாள் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மினுவன்கொடவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி இந்த கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

2010ம் ஆண்டைப் போன்றே இந்தத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.
 

தமது பெயரைச் சொன்னாலே ஐக்கிய தேசியக் கட்சி நடுங்குகிறது தேர்தல்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அஞ்சுகிறது.

யாரையாவது தேர்தலில் போட்டியிட வேண்டுமென நினைத்த ஐக்கிய தேசியக் கட்சி எமது பக்கமிருந்த முட்டாள் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்து கொண்டது.

மைத்திரிபால சிறிசேன முதல் நாள் இரவில் எம்முடன் இணைந்து அப்பம் சாப்பிட்டு அடுத்த நாள் காலையில், எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார்.

இவ்வாறு துரோகம் இழைக்கும் நபர்களை நம்பி எவ்வாறு நாட்டை ஒப்படைக்க முடியும்? நாம் இப்போது அப்பம் யாருக்கும் வழங்குவதில்லை.

கோப்பி மட்டுமே தாம் வழங்குகிறோம். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கோப்பி அருந்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பதனையே விரும்புகிறார்.

அரசாங்கம் பிழை செய்ததாக சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தால் அந்தப் பிழைக்கான பொறுப்பினை அவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►