Facebook
கணக்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்துள்ளது facebook நிறுவனம்.
Facebook இன் பாதுகாப்பு
தொடர்பாக பலருக்கு திருப்தி இல்லாத நிலையே காணப்படுகின்றது.
ஆனால் அவர்கள்
நினைப்பது போல் Facebook ஒன்றும் பாதுகாப்புக் குறைபாடுடைய தளம் அல்ல.
இணையதள கணக்குகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு எமக்கு இருந்தால்
எமது கணக்குகளை யாரும் திருடமுடியாது. எமது கணக்கொன்றின் கடவுச்சொல் போன்ற
விபரங்கள் திருடப்படுகின்றது என்றால் அதற்கான காரணம் எமது பக்கதிலே இருக்க
முடியும்.
உங்கள் Facebook கணக்கு திருடப்படக் கூடிய வழிமுறைகள்.
- உங்கள் கணக்கு விபரங்களை உங்களிடமே கேட்டு வாங்குவது. அல்லது நீங்கள் பயன்படுத்தும் பொழுது அருகில் இருந்து பார்த்து அறிந்து கொள்வது.
- Facebook போன்று தோற்றம் அளிக்கும் தளம் ஒன்றிற்கு உங்களை ஏமாற்றி அழைத்து உங்கள் கணக்கு விபரங்களை உங்கள் கையாலேயே பதிவுசெய்ய வைத்து திருடுவது. (phishing page)
- நீங்கள் பயன்படுத்தும் கணினியில் உளவு பார்க்கும் மென்பொருட்களை (Spy ware) நிறுவி அனைத்தையும் கண்காணிப்பது. இது மிகவும் ஆபத்தானது. இதன்மூலம் கணினியில் உங்கள் செயற்பாடுகள் அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக கண்காணிக்க முடியும். உங்கள் கணக்கு விபரங்களுடன் திரை வெட்டுக்களும் (Screenshot) உடனுக்குடன் உங்கள் கணினியில் இருந்து அனுப்பி வைக்கபடும். மின்னஞ்ல் மற்றும் அரட்டை (Chat) மூலம் மென்பொருட்களை அனுப்பி உங்கள் கையாலேயே நிறுவ வைத்து விடுவார்கள்.
- ஏற்கனவே உளவுபார்க்கும் மென்பொருள் நிறுவப்பட்ட கணினியில் உங்கள் கணக்கை பயன்படுத்த நிர்ப்பந்தித்து திருடுவது. (office, net cafe )
- மேலுள்ள வழிமுறைகளில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் திருடி அதன்பின் Facebook கணக்கை திருடுவது.
- Facebook உடன் இணைக்கப்பட்ட உங்கள் கைத்தொலைபேசியை திருடி அதன்பின் Facebook கணக்கை திருடுவது.
- நீங்கள் இணைய இணைப்பில் இருக்கும் வலைப்பின்னலில் உங்கள் Session logout ஆகாமல் பாதுகாத்து உங்கள் கணக்கை அணுகுவது. உலாவிகளுக்கான plug-in கள் மூலமும் மென்பொருட்கள் மூலமும் சாத்தியம். ( Session hijacking )
இவை தவிர
மென்பொருள் ஒன்றில் உங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியையோ அல்லது கணக்கு
இலக்கத்தையோ கொடுத்து Scan செய்து எல்லாம் உங்கள் கணக்கை திருட முடியாது.
இணயத்தளம் ஒன்றிற்கு $100 செலுத்தி உங்கள் கணக்கிலக்கத்தை கொடுத்தும்
உங்கள் கணக்கை திருட முடியாது.
அப்படி எல்லாம் செய்ய முடியும் என்று யாரவது
சொன்னால் அவர்கள் அடி முட்டாள்கள். அவர்களுக்கு இணையப் பாதுகாப்பை பற்றி
ஏதுவும் தெரியாது என்று அர்த்தம்.
பாதுகாப்பு வழிமுறைகள்.
- தேவையில்லாமல் உங்கள் முக்கிய விபரங்களை (sensitive information) யாருக்கும் கூறக்கூடாது. முக்கியமாக உங்கள் பாதுகாப்புக் கேள்விகளுக்கு பதிலாக வரக்கூடிய விபரங்கள்.
- மற்றவர்கள் ஊகித்துக் கொள்ளக்கூடிய வகையில் கடவுச் சொல்லையோ, பாதுகாப்பு கேள்வி பதில்களையோ அமைக்கக் கூடாது.
- அகராதியில் உள்ள சொற்கள் மற்றும் பொதுவான சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
- பொது இடங்களில் login செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- மற்றவர்களின் wi-fi இணைப்பைப் பயன்படுத்தி ஓசியில் இணைய உலா வருவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- உளவு பார்க்கும் மென்பொருட்கள் தொடர்பாக எப்பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் கணினியில் ஏற்கனவே அவ்வாறான மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ளதா என்று சிறந்த Anti spyware மென்பொருட்கள் மூலம் பரீட்சியுங்கள். பரிந்துரை செய்வது: Windows Security Essentials
- கடவுச் சொற்களை வழங்குமுன் address bar இல் இணையத்தள முகவரி சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- Firefox போன்ற உலாவிகளுக்கு Plug-in களை நிறுவும்பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள்.
மேலதிகமாக Facebook பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குகின்றது.
உங்கள் கடவுச்சொல் தெரிந்தாலும் கூட வேறு நாட்டில் இருக்கும் ஒருவா் உங்கள் கணக்கினுள் நுழைய முடியாது.
உங்கள் மின்னஞ்சல் முகவரி, கைத்தொலைபேசி இலக்கம் மற்றும் பிறந்த திகதி போன்றவற்றை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கலாம்.
நீங்கள் வழமையாகப்
பயன்படுத்தும் கணினியை பதிவு செய்வு வைப்பதன் மூலம் வேறு கணினிகளில்
இருந்து யாராவது உங்கள் கணக்கைப் பயன்படுத்த முயன்றால் உங்கள் மின்னஞ்சல்
முகவரிக்கும் கைத்தொலைபேசிக்கும் எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்படும்.
No comments:
Post a Comment
Leave A Reply