இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொது எதிரணியின் மைத்திரிபால
சிறிசேன 51.3 % வாக்குகளினால் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்று முன்னர் (09)
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து தொலைக்காட்சியினூடு ஆற்றிய விசேட
உரையொன்றினூடே தேர்தல் இறுதி முடிவினை தேர்தல்கள் ஆணையாளர்
வெளியிட்டுள்ளார்.
தேர்தல் இறுதி முடிவு:
மைத்திரிபால சிறிசேன: 6,217,162 (51.3%)
மஹிந்த ராஜபக்ஷ: 5,768,090 (47.6%)
இதனிடையே, புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால
சிறிசேன, நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையின் இன்று மாலை 06.00 மணியளவில்
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்கவுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply