அதன் விபரம் வருமாறு:
- சீனி 10 ரூபாவால் குறைப்பு
- 400 கிராம் பால் மா 325 ரூபா
- சஸ்டஜன் பால் மா – 100 ரூபாவால் குறைப்பு
- பயறு – 40 ரூபாவால் குறைப்பு
- கோதுமை மா – 12.50 ரூபாவால் குறைப்பு
- பாண் விலையும் 6 ரூபாவால் குறையும்
- ரின் மீன் – 50 ரூபா வரை குறைப்பு
- மாலைத்தீவு மீன் இறக்குமதி வரி – 200 ரூபா அதிகரிப்பு
- கொத்தமல்லி – சந்தைவரி குறைப்பு
- நெத்தலி – சந்தை வரி குறைப்பு
- மாசி – வரி குறைப்பு
- கேஸ் – 300 ரூபா புதிய விலை 1595 ரூபா
- மண்ணெய் 6 ரூபா குறைவு
திருமண பதிவு கட்டணம், தொலைபேசி கட்டணம் குறைப்பு
திருமண பதிவுக் கட்டணம் 5000 ரூபாவில் இருந்து 1000 ரூபாவால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
மேலும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளுக்கு விதிக்கப்படும் வரி நுகர்வோருக்கு நீக்கப்பட்டு அந்த வரியை குறித்து நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன விலை குறைப்பு, புதிய வரிகள் அறவீடு
புதிய மாளிகை வரி அறவிடப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு பணியாளர்கள் அனுப்பும் போது அவர்களுக்கு வரி அறவிடப்படும்.
200 மில்லியனுக்கு மேல் லாபமீட்டும் நிறுவனங்களிடம் இருந்து விசேட ஆதாயம் வரி அறவிடப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
1000 CC க்கு குறைந்த வாகனங்களுக்கான இறக்குமதி வரி 15வீதம் குறைக்கப்படும். hybrid வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும்
விளையாட்டு ஔிபரப்பு தொலைக்காட்சிக்கு 1000 மில்லியன் வரி அறவிடு
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் ஊழியர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடுமையாக பாடுபடுவதா அவர் குறிப்பிட்டுள்ளார்.ப்பு கொண்ட விளையாட்டுத்துறை அலைவரிசை கொண்ட தொலைக்காட்சி நிறுவனம் ஒரே தடவையில் 1000 மில்லியன் வரி செலுத்த வேண்டும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மகாபொல 5000 ரூபாவாக அதிகரிப்பு
பயன்படுத்தப்படாத அரச வாகனங்கள் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
வங்கி இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகள் ஆரம்பிக்குமாறும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு அதனை ஆரம்பித்து கொடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
ஊனமுற்ற இராணுவத்தினருக்கு அரச வங்கிகளில் 5 லட்சம் ரூபா குறைந்த வட்டிக் கடன் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
சுய தொழில் புரிவோருக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும். மகாபொல புலமை பரிசில் 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பள உயர்வு!
அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றில் தற்போது மினி வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்து உரையாற்றி வரும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47வீத சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்
முதியவர்களுக்கு விசேட பஸ் கட்டணம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யும் கட்டணம் 5000 ரூபாவாக குறைக்கப்படும்
ஊடக விளம்பரங்கள் செய்யும் போது அமைச்சுக்கள் அரச நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் அநாவசிய விளம்பரங்கள் அதிக செலவில் செய்யப்படுவதாகவும் அவ்வாறு செய்யப்படும் செலவும் அரசியல் வாதிகளால் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடு சென்று அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்கள் இலங்கையின் அபிவிருத்தி ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.
சிறிலங்கா எயார்லைன்ஸ் கடந்த 5 வருடங்களில் 100 பில்லியன் நட்டத்தையும் மிஹின் எராய் 5 வருடங்களில் 15 பில்லியன் நட்டத்தையும் எதிர்கொண்டுள்ளதால் இவற்றை எதிர்காலத்தில் தவிர்க்கும் வகையில் இவ்விரு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்படும்.
கடனட்டை வரி 8 வீத குறைக்கப்படும் என்றும் படிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply