blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, January 28, 2015

மைத்திரி கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!!1?

மைத்திரி கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்! பதவி விலகும் அமைச்சர்?தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நெருக்கிய சகாவாக இருந்த பைசர் முஸ்தபா, மைத்திரி தலைமையிலான எதிர்கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்தநிலையில் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்ட மைத்திரி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராக பைசர் முஸ்தபா அங்கம் வகித்தார்.

தற்சம் பைசர் முஸ்தபா தனது அமைச்சுப் பொறுப்பு தொடர்பில் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன், அதிலிருந்து விலகிக் கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, தற்போதைய மைத்திரி அரசில் சிவில் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது அமைச்சுக்கு கீழ் வரும் நிறுவனங்களின் பட்டியல் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

அதன் பிரகாரம் சிறிலங்கன் விமானசேவை, மிஹின் லங்கா விமான சேவை, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதிகார சபை, விமானத்துறை ஆராய்ச்சி நிறுவனம் என்பன உள்ளடங்கியிருந்தன.

இந்நிலையில் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த சிறிலங்கன் விமான சேவை மற்றும் இன்னொரு நிறுவனத்தை தற்போது அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விடயம் காரணமாக கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா, நேற்று நண்பகல் தனது அமைச்சு அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

அத்துடன் தனது தனிப்பட்ட அலுவலர்களையும் அங்கிருந்து திருப்பி அழைத்துக் கொண்டுள்ளார். அமைச்சர் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகம் மற்றும் வாகனங்கள் என்பனவும் தற்போது திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று மாலைக்குள் தனக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்யும் முடிவில் அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►