மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (25) அதிகாலை 12.30 மணியளவில் வந்த இற்கும் மேற்பட்ட ஆயுதம் தரித்த கும்பலொன்று இந்த அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசி, அடித்து உடைத்து எரித்ததாக அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் 2 துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் சகிதம் வந்தனர் என பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவ நேரத்தில் அலுவலகத்தில் 11 பேர் இருந்தனர் எனவும் அவர்கள் துப்பாக்கிகளுடன் வந்ததால் தாங்கள் தப்பித்து ஓடினர் எனவும் அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின் உறுப்ப...
No comments:
Post a Comment
Leave A Reply