தொடரும் அடைமழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தை அகற்றும் நடவடிக்கையில் கல்முனை மாநகர சபை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பரின் அவசர பணிப்பின் பேரில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக கல்முனை மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதி ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் கடந்த ஞாயிறு தொடக்கம் மறு அறிவித்தல் வரை முதல்வரினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கல்முனை மாநகர சபைப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களை முதல்வர் நிஸாம் காரியப்பர் நேரடியாக சென்று பார்வையிடுவதுடன் கொட்டும் மழைக்கு மத்தியில் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளார்.
நேற்று இரண்டாவது நாளாக களத்திற்கு சென்று மாநகர சபை ஊழியர்களுடன் வெள்ள நீரை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முதல்வர், இதன்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் இடர்பாடுகளையும் நிவர்த்தி செய்து வருவதுடன் தேவையான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றார்.
அத்துடன் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்குமாறும் முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வெள்ளத்தினால் கல்முனை பொதுச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதனை சீர் செய்யும் பணிகளும் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடைபட்டுள்ள உள்ளக வடிகாங்களின் தடுப்புகளை அகற்றி துப்பரவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சாய்ந்தமருதில் வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் பொருட்டு தோனா ஆற்றின் முகத்துவாரம் மாநகர சபையினால் தினசரி தோண்டப்பட்டு வெள்ள நீர் கடலுக்கு அனுப்பப்படுவதுடன் சல்பீநியாக்களும் அடித்துச் செல்லப்படுகின்றன.
மேலும் சாய்ந்தமருதின் சில வீதி வடிகான்களில் ஏற்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டு வெள்ள நீர் சீராக வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று பெரிய நீலாவணையில் அமைந்துள்ள முகத்துவாரமும் வெட்டப்பட்டு வெள்ள நீர் கடலுக்கு அனுப்பப்படுகிறது.
அத்துடன் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, மணற்சேனை, பாண்டிருப்பு, போன்ற பிரதேசங்களில் பல்வேறு வீதிகளிலும் வெள்ள நீரை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் வீதிகளின் அருகே தற்காலிக வடிகான்கள் தோண்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோடுவதுடன் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரும் அகற்றப்பட்டு வருகின்றது.
முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் அவர்களின் நெறிப்படுத்தலில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையினால் வெள்ளத்தில் மூழ்கிய சில பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, December 25, 2014
வெள்ளம் அகற்றும் நடவடிக்கையில் கல்முனை மாநகரசபையும் முதல்வரும்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
No comments:
Post a Comment
Leave A Reply