நிந்தவூர்
பிரதான வீதி ஜூம்மாப்பலள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள
தனியாருக்குச்சொந்தமான கடைத்தொகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு கடைகள்
நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் பூட்டுக்களை உடைத்து கொள்ளை
இடப்பட்டுள்ளன.
'FANCY PARK' எனப்படும் வீட்டுப்ப்பாவனை மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்கும் நிறுவனமும், FAROOK STORS (மாத்தையாட மகனின் கடை )எனப்படும் மிகவும் பிரபல்யமான மொத்த சில்லறை பலசரக்குக்கடையுமே இவ்வாறு உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இரவு
பதினொரு மணியளவில் கடை உரிமையாளர்கள் கடைகளை
மூடிவிட்டுச்சென்றிக்கின்றார்கள் ,இன்று அதிகாலை சுபஹு தொழுகைக்காக
பள்ளிவாசளுக்குச்சென்றவர்கள் வழமைக்கு மாறாக நேரகாலத்தோடு கடையின் கதவுகள்
அகலத்திறந்திருப்பதை அவதானித்து உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி
உள்ளார்கள்.
இதனை
அடுத்து நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாகீர் சம்மாந்துறை
பொலிசாருக்கு அறிவித்திருக்கின்றார். போலீசார் மேலதிக விசாரணைகளை
மேற்கொள்ளுகின்றனர்.
மிகவும் உறுதியான இந்த செம்புப்பூட்டுக்கள் பலமான ஆயுதம் கொண்டு உடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
FANCYPARK நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாகீர் அவர்களது சகோதரருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply