வட கிழக்கு மகாண உளவள ஆலோசகர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்பு அண்மையில் மனநல பயிற்சி நிறுவனம், அங்கொடையில் இடம் பெற்றது.
இதில் வட கிழக்கில் காணாமல் போணவர்களின் குடும்பத்தின் உள நலனை பேணும் பொருட்டு விஷேட உளவள ஆலோசனைச் சேவை வழங்குவதற்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பாக இப்பயிற்சி நெறி அமையப்பெற்றது.
இப்பயிற்சி நெறியினை உளவளத்துறை விஷேட நிவுணர்களான வைத்தியர் மென்டிஸ் பெர்னான்டோ மற்றும் கணேஷ்ராஜ் நடத்தினார்கள். இப்பயிற்சி நெறியினை சமூக சேவைகள் அமைச்சு மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி நெறியில் வட கிழக்கில் இருந்து உளவள ஆலோசகர்கள் 50 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply