வழக்குத் தாக்கல் செய்யாமை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து தாமதமின்றி நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் முழுமையான அதிகாரங்களுடன் கூடிய குழு ஒன்றை நியமிப்பேன்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் நடைபெறாத வகையில் வரலாற்றில் முதன் முறையாக மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மக்கள் கைவிட்டுச் சென்ற வாகனங்களையும், மறைத்து வைக்கப்பட்ட தங்க நகைகளையும் இராணுவத்தினரிடம் உறுதிப்படுத்திய பின்னர் மீள மக்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இவ்வருடம் செய்து முடிப்பேன்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவிய காலகட்டத்தில் இராணுவத்தினரால் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு சொந்தமில்லாத காணிகள் மற்றும் கட்டிடங்களை மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவுற்றதன் பின்னர் மீள உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இதுவரையில் பாரிய அளவில் முடித்துள்ளேன்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லாத வகையில் குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்நடவடிக்கைகளை செய்து முடிப்பேன்.
பயங்கரவாதம் காரணமாக கடந்த காலங்களில் பிரதான அபிவிருத்தி பிரவாகத்தில் இருந்து ஒதுங்கி இருந்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர், யுவதிகளை தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளில் சமாந்தரமான பங்காளிகளாக பங்கு பற்ற செய்வதற்காக சமூக உள்ளாக்கல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டினை துரிதப்படுத்தும் முகமாக மத்தியகால வரையறைக்குள் உரிய வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவேன்.
எதிர்வரும் வருடங்களில் தேசத்தின் மகுடம் செயற்த்திட்டத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
நாட்டில் எந்தவொரு பகுதியிலாவது பயங்கரவாதம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள எந்தவொரு மக்கள் சமூகத்தினருக்கும் உரிய நட்டஈடு கிடைக்கப் பெறாதிருக்கும் குடும்பங்களுக்குரிய பரிந்துரைக்கப்பட்ட நட்டஈட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம் பெயர்ந்துள்ள மற்றும் முகாம்களில் இருக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமூகங்களின் நபர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையினை துரிதப்படுத்தி இவர்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் குடியேறுகின்ற உரிமையை தாமதிக்காமல் உருவாக்கிக் கொடுப்பேன்.
துரதிஸ்டவசமாக குறிப்பிட்ட சில இனவாத அல்லது மதவாத நபர்களினால் உருவாக்கப்பட்டுள்ள சமூக மோதல்களை முற்று முழுதாக தடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறான மோதல்களுக்குள் சிக்குண்டுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து நபர்களினதும் பாதுகாப்பையும் அவர்களது மதவழிபாட்டுக்குரிய உரிமையையும் உறுதிப்படுத்துவேன்.
நாட்டில் அனைத்து மாகாணங்களுக்கும் உரிய கல்வி மற்றும் சுகாதார வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் பொது வசதிகள் என்பவற்றை சமமான முறையில் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்....
நாடு பிளவடைவதனை அனுமதிக்க முடியாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!
நாடு பிளவடைவதனை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனையின் உலகினை வெல்லும் வழி” என்ற தொனிப் பொருளில் சற்று முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
உள்நாட்டைச் சேர்ந்த சிலரும் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாம் தவணை ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் சாசனமொன்றை நிச்சயமாக உருவாக்குவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்.
அனைவரினதும் ஒத்துழபை;புடன் இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் எத்தனை தரப்புடன் எத்தனை உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஆளும் கட்சியின் ஒரே ஆவணம் மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டமே என அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப அரசியலில் ஈடுபடவில்லை எனவும் ஒட்டு மொத்த நாட்டையும் ஒரே குடும்பமாக நினைத்து ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005ம்ஆண்டு மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் ஊடாக நாட்டுக்கு சுதந்திரம் அளிக்கப்படும் என வழங்கிய வாக்குறுதி நான்கு ஆண்டுகள் நிறைவேற்றப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு அபிவிருத்தியை ஏற்படுத்துவதாக அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தலையீடுகளை தடுக்கும் நோக்கிலேயே கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இன்றைய தினம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த சிந்தனை உலகினை வெல்லும் வழி என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
சில வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தலையீடுகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான அபிவிருத்தியை நோக்கி நகர்வதா அல்லது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதா என்பது பற்றிய பிரச்சினையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் நோக்கில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply