blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, December 17, 2014

சிரமங்களை நினைத்து மண வாழ்க்கையை துறப்பது படைப்பின் பரிணாமத்துக்கே அர்த்தமற்றது - றினோஸ் ஹனீபா

கூட்டுக் குடும்ப வாழ்க்கை  சிதைகிறது. மணமான மறுவாரமே கூட தனிக்குடித்தனத்துக்கு தயாராகும் மனோபாவமும் ஆர்வமும் அதிகரித்துவருகிறது.

இது ஒரு பக்கம் வேதனை என்றாலும் இன்னொரு பக்கம் திருமணத்தையே அடியோடு வெறுக்கும் போக்கும் மிகுதியாகிறது. குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குவது - பொருளாதார நெருக்கடிகள் - வாழ்வாதார சிரமங்கள்.. இவற்றையெல்லாம் மனதில் கொள்வதால் மண வாழ்க்கைகை ஏற்க தயங்குகிறார்கள்.

அதிலும், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்கள் கல்யாணம் என்றாலே பத்தடி தள்ளி நிற்கிற அளவுக்கு இருக்கிறார்கள். பல விஷயங்களில் நாம் மேலைநாடுகளை பின்பற்றி நமது பண்பாட்டை இழந்து வருகிறோம்.

அதில் மிக முக்கியமானது கூட்டுக் குடும்ப வாழ்க்கை. இன்றைய சூழலில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அதில் இருக்கிற சுமைகளே நமக்கு சுகம் என்பதை மறந்துவிடுகிறோம்.

இப்போது உறவுகள் கூட உள்ளத்தளவில் இல்லாமல் உதட்டளவுக்கு மாறிவிட்டது. உணவு, உடை என எத்தனையோ விஷயங்களில் நாம் மாறி விட்டோம். எது மட்டுமின்றி இந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையைத் துறப்பதும்..மறப்பதும் நமக்கு மட்டுமல்ல... நாட்டுக்கும் நல்லதல்ல.


சாதாரண சிரமங்களை நினைத்து, சாதிக்க வேண்டிய மண வாழ்க்கையை துறப்பது படைப்பின் பரிணாமத்துக்கே அர்த்தமற்றது ஆகிவிடும். முடிந்தவரை கூடி வாழ்வோம்.. கோடி நன்மைகள் பெறுவோம்.

திருமண வாழ்க்கை தொடர்பாக சிந்திக்கும் அதே கணம் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்கின்ற சூழலினை நாம் அமைத்து  திட்டமிட வேண்டும்.

குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இளைஞர்கள் தமது திருமண வாழ்க்கையினை திட்டமிடுகின்ற போது இயலுமனவரை குடும்பத்தோடு சேர்ந்து வாழ்கின்ற நிலமையை உருவாக்க வேண்டும். இதனை செய்யாமல் வீனான சந்தேகத்தினை தனக்குள் உருவாக்கி தானும் நிம்மதி இழந்து தன் மனைவியையும் நிம்மதி இழக்கச் செய்ய கூடாது.

அதே போல தனது தகுதி, அறிவுத்தராதரத்திற்கேப மனைவியினை தெரிவு செய்து  கொள்ள வேண்டும்.  சில இளைஞர்கள் படித்த யுவதிகளை திருமணம் செய்கின்றார்கள் நல்ல விடயம் தான் ஆனால் சில நடை முறைவிடயங்களை விளங்கிக் கொள்ள முடியாமல் வீனான சந்தேகப்பட்டு மனைவியினை துன்புறுத்துகின்றார்.

உதாரணமாக: அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்கின்ற போது அப் பெண்னின் வேலையின் தன்மை, தொடர்வு, சேவை பெறவருகின்றவர்களின் தன்மை, என்பவற்றை உணர்ந்து தனது மனைவியினை அவளுடைய தொழிலில் தன்மைக்கேற்ப விளங்கிக் கொண்டால் வீனான சந்தேகம் தேவையில்லை எம் வாழ்வில்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►