பாரதீய ஜனதாக்கட்சியின் செயலாளர் முரளிதரராவ் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வு ஒன்றில் பேசிய முரளிதரராவ், மோடியின் அரசாங்கம் இலங்கையுடன் உறவை கொண்டிருக்காதுபோனால், எவ்வாறு தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
சீனா, பாக்கு நீரிணையில் ஏற்கனவே காலூண்றி உள்ளது. அத்துடன் இலங்கையில் அது பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்தநிலையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தியா, இலங்கையுடன் உறவை கொண்டிருப்பது அவசியம் என்று முரளிதரராவ் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தற்போதுள்ள அரசாங்கம், பொம்மை அரசாங்கம். இது தன்னியக்கக்கருவியின் தூரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
அதேபோல முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆட்சிக்கு வந்தால் தமது குடும்பத்தினரின் ஊழல் தொடர்பிலேயே சிந்திக்க முடியும் என்றும் முரளிதரராவ் சுட்டிக்காட்டினார்.
இந்தநிகழ்வில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன், இலங்கை ஜனாதிபதி யமன் என்றால் மோடி அவருக்கு யமன் என்று குறிப்பிட்டார். ராஜபக்ச என்ற யமன், யமனின் மாஸ்டரான சிவனை பற்றி அறிந்து வைத்திருக்கிறார்.
எனவேதான், மோடி கேட்டமைக்கு இணங்க இலங்கையில் மரணதண்டனை பெற்ற ஐந்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க ராஜபக்ச உடன்பட்டார் என்று ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
இந்தநிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றார்.

No comments:
Post a Comment
Leave A Reply