ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதவளிப்பது தொடர்பில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவற்றை நிறைவேற்ற 7 நாள்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார்.
இந்நிலையில் முக்கிய அமைச்சர்களும், எம்.பிக்களும் பொது வேட்பாளரான மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசனலி ஆகியோர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினர்.
இதன்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஜனாதிபதிக்கு தேர்தலில் ஆதரவு வழங்குவோம் என அறிவித்தனர். இதற்காக எழு நாட்கள் அவகாசமும் வழங்கினர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, December 1, 2014
ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஏழு நாள்களே அவகாசம்! சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியது!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக க...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply