blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, December 11, 2014

100 ரியாலுக்காக 3 மாதம் குழந்தை உள்பட 9 குழந்தைகளை கொடுமை செய்த தந்தை!!

100 ரியாலுக்காக 3 மாதம் குழந்தை உள்பட 9 குழந்தைகளை கொடுமை செய்த தந்தைசவுதி அரேபியாவுன் செங்கடல் நகர் ஜித்தா நகரில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் ஒரு பெண் படித்து வந்தார்.  பள்ளி நேரத்தின் போது அந்த பெண் ஷூ அணியாமல் வெறுங்காலுடன் நடந்து சென்று உள்ளார். 

அது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் விசாரித்து உள்ளார்.அப்போது அந்த பெண்  வீட்டில் தந்தை வைத்து இருந்த 100 ரியாலை காணவில்லை எனவும் அதனால்  தனது காலில் சூடு வைத்துள்ளதாகவும் அதனால் வலிகாரணமாக ஷீ அணியவில்லை எனகூறு உள்ளார்.

மேலும் தனது தந்தை வீட்டில் உள்ள 3 மாத குழந்தை உள்பட 18 வயது வரை 9 குழந்தைகளை தினமும் கொடுமை படுத்தி வருவதாக கூறி உள்ளார். தன்னை இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி சூடு போட்டு உள்ளார் என கூறினார்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜித்தாவில் உள்ள சமூக பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக சமூக பாதுகாப்பு அதிகாரிகள் குழந்தைகளை பரிசோதனைக்காக கிங் பஹத் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும்  குழந்தைகளுக்கு உளவியல்  மற்றும் சமூக ஆதரவு வழங்க முடிவு செய்து உள்ளனர்.

சமூக பாதுகாப்பு அமைப்பு விசாரணையில் குழந்தைகளின் தாயார்  பள்ளி ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.அவருக்கு இந்திய பணத்தில் 53 ஆயிரம் ( 3 ஆயிரம் ரியால் வரை)  சம்பளமாக கிடைத்து வந்தது. அவர் விகாரத்துக்கு பயந்தும் குடும்பத்தை பிரிக்க வேண்டாமே என்பதற்காகவும் கணவனுக்கு எதிரகா ஒன்றும் பேசுவது இல்லை.

குழந்தைகளின் தந்தை  வேலை இல்லாதவர் ஆவார் ,சமூக  ஒருமைப்பாடு வேலைதிட்டத்தில் இருந்து மாதாந்திர உதவி பெற்று வந்து உள்ளார்.

சமூக பாதுகாப்பு அதிகாரிகள் குழந்தைகளை தற்காலிகமாக தங்க இடம் அளித்து உள்ளது பின்னர் அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என கூறினர்.

குழந்தைகளில் மூத்த மகள் கூறும் போது:- தான் தனது தாயுடன் வாழப்ப்வதாகவும் தந்தியௌடன் வாழவிரும்பவில்லை என கூறினார். தனது தந்தை தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை தாக்குவதாகவும் கூறினார்.

மற்றோரு சகோதரி கூறும் போது:-தங்களது தந்தை தங்கலை மிருகதனமாக தக்கியதால் தாங்கள் உடல் அளவில் பாதிக்கபட்டு உள்ளோம். பள்ளியில் வேறு எஙகள் தரம் மிக குறைவாக உள்ளது என்று கூறினார்.

ஜித்தா சமூக பாதுகாப்பு அமைப்பு அதிகாரி சலாஹ் அல் ஹாம்தி கூறும் போது:-இந்த குழந்தைகளின் குற்றசாட்டுகள் குறித்து கேட்டறிய அவர்களது தந்தையை சந்திக்க வேண்டும்.என்று கூறினார்.

சவுதி அரேபியாவில்  குழந்தைகளை  பள்ளியில் கொடுமை படுத்தல், வீடுகளில் கொடுமைபடுத்தல் ஆகியவற்றில் இருந்து  பாதுகாக்க  சமூக அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் ., டாக்டர்களை  சவுதி அரேபிய அரசு வலியுறுத்தி வருகிறது.

தேசிய குடும்ப பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகம் இயக்குனர்   மகா அல் முனீப் கூறும் போது  கூறும் போது குழந்தைகளுக்கு எதிராக வன்முறை நடப்பதாக  206 வழக்குகள் உள்ளன.  இதில் இதில் 60 சதவீதம் துஷ்பிரயோகங்கள், 20 சதவீதம் உடல் ரீதியானது. மீதம் உள்ள 20 சதவீதம் அலட்சியம் மற்றும் மனரீதியிலானது ஆகும் என கூறினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►