கல்முனை பிரதேச செயலகத்தில் உலக உளநல தினம் தொடர்பான கருத்தரங்கில் செக்றோ
ஸ்ரீலங்காவின் ஸ்தாபக தலைவரும் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா கல்முனை
பிரதேச செயலாளர் ஏ.மங்கள விக்கிரமராச்சிக்கு உளவள ஆலோசனை தொடர்பான கைநூலை கையளித்து இச்சேவையினை ஆரம்பித்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் (உளவளத்துணை) ஏ.ஆர் தஹ்லான் நிர்வாக உத்தியோகத்தர் முனாஸுக்கு கை நூலை வழங்கி ஆரம்பித்தார்.
இச்சேவை மூலம் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படுகின்றவர்கள் அரசாங்கத்தால்அங்கீகரிக்கப்பட்ட உளவள ஆலோசனை உத்தியோகத்தர்களிடமிருந்து இலவசமாக ஆலோசனைகளை பெறலாம் தொடர்வு கொள்ள வேண்டிய இலக்கம் 0776575712, 0772483404.
இந்திகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் லாஹிர், நிர்வாக உத்தியோகத்தர் முனாஸ், சமூக சேவை உத்தியோகத்தர் அன்சார், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் யாசின் பாவா, மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.



No comments:
Post a Comment
Leave A Reply