எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, November 10, 2014
தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவுமேயில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு!
காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமண விழா ஒன்றில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன், சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதை, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சட்டப்பேரவை செயலர் முறைப்படி அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், இணையதளம் மூலமாக சட்டமன்ற செயலர் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஜெயலலிதா பதவி பறிக்கப்பட்டதால், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருக்கிறது என சொல்வதில், அறிவிப்பதில் என்ன கஷ்டம்? ஏன் ஒளிந்து, மறைய வேண்டும்.
இதெல்லாம், அரசுக்கு வெட்கக்கேடான சம்பவங்கள். மொத்தத்தில், இந்த அரசுக்கும் வெட்கம், சூடு, சொரணை எதுவுமேயில்லை.
சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கிறது என்ற சட்டமன்ற செயலாளரின் அறிவிப்பு பத்திரிக்கை குறிப்பு வாயிலாக பத்திரிக்கைகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு.
ஆனால் அம்மையார் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி காலியானது என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுகள் மதிக்கப்படாத சூழலைத் தான் நாம் தமிழகத்தில் காண்கிறோம் என்பது வருத்தமளிக்கிறது.
அரசாங்கத்தை இயக்கும் முதலமைச்சரும், அமைச்சர்களும் கொஞ்சமாவது சுயமரியாதையையும், கண்ணியத்தையும் காப்பாற்றி ஆட்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply