இலங்கையில்
தூ க்கு தண்டனை விதிக்கப்பட்ட த மிழக மீனவர்கள் 5 பேரையும் இந்திய
சிறைக்கு மாற்ற மோடியிடம் ராஜபக்சே சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன.
அதே நேரத்தில் நேற்று கொழும்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீ ட்டு
மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ராமேஸ்வரத்தில்
இருந்து கடந்த 28.11.2011ல் மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள்
எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோரை இலங்கை
கடற்படையினர் கைது செய்தனர்.
இவர்களை கைது செய்த அதே நாளில் இலங்கை
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் கிறிஸ்துராஜா சீ ல்தன், ஞானபிரகாசம்
துஷாந்தன், கமல கிறிஸ்டியன் ஆகியோரும் இலங்கை கடற்படையினரால் கைது
செய்யப்பட்டனர்.
இவர்கள் 8 பேர் மீதும் ஹெராயின் போதை பொருள் கடத்தியதாக
வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். 35
மாதங்களாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் கடந்த 30ம்
தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
தமிழக மீனவர்கள்
5 பேர் உட்பட 8 பேருக்கும் தூ க்கு தண்டனை விதித்து நீ திபதி பத்மசூ ரசேன்
உத்த ரவிட்டார். மேலும் நவம்பர் 14ம் தேதிக்குள் இத்தீர்ப்பு குறித்து
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கை வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் அனைவரும்
தீர்ப்புக்கு பின்பு தூக்கு தண்டனை கைதிகள் அடைக்கப்படும் தனி சிறைக்கு
மாற்றப்பட்டனர். கைதிகளுக்கான சீருடையும் வழங்கப்பட்டன.
தமிழக மீ
னவர்கள் 5 பேருக்கு தூ க்கு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்ட நாள்
முதல் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் பல்வேறு
அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக மத்திய
அரசின் வெளியுறவு துறை இந்த
விஷயத்தில் நேரடியாக தலையிட்டது.
இலங்கை கொழும்புவில் உள்ள இந்திய தூதரக
அதிகாரிகள், தமிழக மீனவர்கள் வழக்கு குறித்து தகவல்களை பெற்று தூக்கு
தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யவும் உத்தரவிட்டது.
சிறையில் உள்ள
மீனவர்களை நேரில் சந்தித்து பேசிய இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரி
ஓய்.கே. சின்ஹா மீ னவர்களின் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டார். மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து தமிழக
மீன்வளத்துறை அதிகாரிகள், 5 மீனவர்களின் வழக்கு குறித்த ஆவணங்களை வெளியுறவு
துறைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வக்கீல்
கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழக
அரசு ரூ. 20
லட்சத்தை வெளியுறவு துறை மூலம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு
அனுப்பி வைத்தது.
இலங்கை உயர்நீதிமன்றத்தில் மீனவர்களின் தீர்ப்பு குறித்த
நகலை வாங்கிய இந்திய தூதரக அதிகாரிகளின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
செய்ய இலங்கையின் மூத்த வக்கீல் முஸ்தபா, ஏற்கனவே இவ்வழக்கில் ஆஜரான
வக்கீல் அனில் டி. சில்வா மற்றும் தமிழ் மொழி தெரிந்த வக்கீல் சாரதி
ஆகியோரை நியமித்துள்ளனர்.
மேல்முறையீடு செய்வதற்கு தேவையான அனைத்து
ஆவணங்களும் தயாரான நிலையில் நேற்று காலை கொழும்பு உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
இந்திய தூதரக அதிகாரிகள் முன்னின்று செய்தனர்.
அதே நேரத்தில்
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில்
பேசியதாகவும் அப்போது தமிழக மீனவர்கள் 5 பேரையும் இந்திய சிறைக்கு மாற்ற
வேண்டும் என்று கேட்டு கொண்டதாகவும் இந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை
எடுப்பதாக ராஜபக்சே உறுதியளித்ததாகவும் இதனால் விரைவில் மீனவர்கள் இந்திய
சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்று பாஜக மூ த்த தலைவர் சுப்பிரமணியசுவாமி
தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
மீனவர்கள்
விடுதலைக்காக போராடி வரும் இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள மீனவர்கள்
இந்திய சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள தகவலால் தமிழக
மீனவர்கள் மற்றும் தண்டனை பெற்ற மீனவர்களின் உறவினர்கள் ஓரளவு
நிம்மதியடைந்துள்ளனர்.
இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5
மீனவர்களின் த ண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று காலை தங்கச்சி
மடத்தில் ஒன்றிய மீனவ கூட்டமைப்பு சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
தங்கச்சிமடம் புனித தெரசாள் ஆலயத்திற்கு அருகில் இருந்து துவங்கிய
மீனவர்களின் பேரணிக்கு கூட்டமைப்பு தலைவி பூரணி தலைமை வகித்தார்.
மீனவர்களின் பேரணியை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடந்தது.
No comments:
Post a Comment
Leave A Reply