blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, October 24, 2014

புலி பயங்கரவாதம் காரணமாக வட மாகாணத்தில் தமது காணி, வீடுகளை இழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் விபரம் கோரல்

1980 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் புலி பயங்கரவாதம் காரணமாக தமது காணி, வீடுகளை இழந்து இது வரை குடியேற்றப்படாத சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் விபரங்களை பெற்றுக் கொள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய காணி மற்றும் வீடுகள் இழந்தவர்கள் கீழ் குறிப்பிடப்படும் விபரங்களுடன் விண்ணப்படிவத்தை தயாரித்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இலக்கம் 15/5 பாலதக்ஷ மாவத்தை, கொழும்பு – 03 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்பொழுது குடியேற்றப்பட்டிருக்கும் காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.
இது தொடர்பில் இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பளாருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
காணி மற்றும் வீடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்பவர்கள் தமது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, கிராம உத்தியோகத்தர் பிரிவு, பிரதேச செயலக பிரிவு மற்றும் மாவட்டம் ஆகிய விபரங்களையும் அதேபோன்று

பயங்கரவாதம் காரணமாக கைவிடப்பட்ட காணி மற்றும் வீடு தொடர்பில் விபரங்கள் வழங்கும் போது பெயர், உரிமையாளரின் பெயர், கைவிடப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த ஆண்டு முகவரி, கிராம உத்தியோகத்தர் பிரிவு, மாவட்டம், பிரதேச செயலக பிரிவு ஆகிய விபரங்கள் உள்ளடக்கிய விண்ணப்ப படிவத்தை வடிவமைத்து அனுப்பி வைக்கவேண்டும். 
மேலும், இவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் இந்த படிவத்துடன் இணைத்து அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கிறது.
மாதிரி தகவல் படிவம்
முறைப்பாடு செய்பவர்களின் விபரம்
பெயர் :- ……………………………………………………………..….
முகவரி :- ……………………………………………………………..….
தோ. இல./ மின்னஞ்சல் :- ……………………………………………………………..….
கி. உ. பிரிவு :- …………….…… பிரதேச செயலக பிரிவு :- …………….…
மாவட்டம் :- ……………………………………………………………..….
பயங்கரவாதம் காரணமாக கைவிடப்பட்ட காணி/வீடு
பெயர் :- ……………………………………………………………..….
உரிமையாளரின் பெயர் :- ……………………………………………………………..….
கைவிடப்பட்ட / இடம்பெயர்ந்த ஆண்டு :- ………………………………………………….
முகவரி :- ……………………………………………………………..….
கி. உ. பிரிவு :- ……………………………………………………………..….
மாவட்ட செய / பிரதேச செயலக பிரிவு :- …………………………..…………………..….
இது தொடர்பாக நிரூபிக்கும் ஆவணங்கள் :- ……………………………………………..….
(இருந்தால் இணைக்கவும்)

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►