ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்பதற்கொனத் தயாரிக்கப்பட்ட படிவங்களை கிளிநொச்சிப்பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மக்களுக்கு படிவங்களை விநியோகித்துக் கொண்டிருந்த சமயமே நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கைதான நபரிடமிருந்து போர்க்குற்ற விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவிருந்த படிவங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், அவரை வவுனியாவுக்கு கொண்டுசென்று விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply