தற்போது மலை
நாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான
மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
மஹிந்த அமரவீரவிடம்
வேண்டுகோள் விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர்,பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த கவலையினையும் தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள் விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர்,பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த கவலையினையும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் இது தொடர்டபில் மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது
காணப்படும் கால நிலை மாற்றத்தையடுத்து மலையகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள
மண்சரிவினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகள்
மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு
தேவையான உதவிகளை வழங்குவதுடன்,மேலும் இழப்புக்களை தவிர்ப்பதற்கு தேவையான
நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடுவது தொடர்பிலும்,அச்ச சூழல் நிலவும்
பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளையும்
அரச துரிதமாக முன்னெடுத்துவருகின்றது.
மண்சரிவினால்
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தவறியுள்ளதாகவும்,அவர்களை தேடும் பணிகளில்
தொடர்ந்தும் அனர்த்த முகாமை்முவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள்
ஈபட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத்
பதியுதீன்,பாதிப்புக்குள்ளான மக்களது தேவைகளை பெற்றுக் கொடுக்க அனைவரும்
முன்வருமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply