இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருக்கவே விரும்புவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஐ.எஸ்.எஸ் என்ற மும்பாயில் உள்ள சமூக தரவுகள் அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது.
இதன்படி இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர் இந்தியாவில்
தொடர்ந்தும் இருப்பதையே விரும்புகின்றனர்.
சுமார் 520 குடும்பங்களில் 23 சதவீதமான குடும்பங்களே இலங்கைக்கு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளன.
மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களே மீண்டும் திரும்பும் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். அதிலும் 42
வீதமானோர் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தின் அனுசரணையில் திரும்ப விரும்புகின்றனர். 4 சதவீதத்தினர்
மூன்றாம் நாடு ஒன்றுக்கு செல்ல விரும்புகின்றனர்.
மேலும் இந்தியாவில் 111 முகாம்களில் 67ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். ஏனையவர் முகாம்களுக்கு வெளியில் தங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply