blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, October 22, 2014

இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

சந்திரப் பஞ்சாங்கத்தின்படி இந்து புதுவருடத்தின் ஆரம்பத்தைக் குறித்து நிற்கும் இந்து சமூகத்தின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தீபத்திருநாள் அல்லது தீபாவளிப் பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மை யையும், அறியாமையையும் நீக்கி அறிவுடமை யையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றிகொள்வதைக் குறுத்து நிற்கிறது.


வழிபாடுகள் ஆன்மீக வணக்கங்கள் மூலம் இலங்கை வாழ் இந்துக்கள் இந்த விசேட பண்டிகையைக் கொண்டாடுவதில் உலகெங்கிலுமுள்ள இந்து மக்களுடன் இணைந்து கொள்கின்றனர். 
அறியாமையிலிருந்து எழும் தீயவற்றை வெற்றிகொள்வதற்கு அறிவுடமையையும் புரிந்துணர்வையும் அடைந்து கொண்டமைக்காக தெய்வங்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்துமுகமாக இந்துக்கள் இன்றைய தினம் கோயில்களில் விளக்கேற்றி வீடுகளை விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.

இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களை வெளிப்படுத்தி நிற்கும் அன்பு மற்றும் அர்ப்பண உணர்வு நிறைந்த இந்த தீபத்திருநாள் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களை வளர்த்துக் கொள்வதற்கும் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும் மக்களுக்கு மத்தியில் சுபீட்சத்தையும் ஐக்கியத்தையும் அதிகரித்துக்கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாகும்.

தீபாவளி பண்டிகையின் போதான சமய நடைமுறைகள் மற்றும் கொண்டாடங்கள் நாட்டில் தற்போது நிலவுகின்ற நல்லிணக்க உணர்வுக்கு இந்து சமூகத்தின் ஆர்வமும் செயல்திறனும் வாய்ந்த பங்குபற்றுகை மேலும் பெறுமதி சேர்ப்பதாக அமையும்.

இத்தீபத்திருநாள் இந்து சமயப் போதனைகளைப் பின்பற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியையும் சமா தானத்தையும் புரிந்துணர்வையும் கொண்டுவர வேண்டும் என பிரார்த் திக்கிறேன்.

இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►