நாட்டிலிருந்து
சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படவிருந்த 60 இலட்சத்திற்கும் அதிகமான
வெளிநாட்டுப் பணம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.இதில் அமெரிக்க டொலர், யுரோ மற்றும் இலங்கை ரூபா என்பன காணப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டிலிருந்து சாஜாவிற்கு பயணித்த ஒருவரிடம் இருந்தே, இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
சுங்கப் பிரிவினரின் விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் லெஸ்லி காமினி மேலும் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply