கிழக்கு மாகாணத்திலுள்ள கஷ்டப் பாடசாலைகளில் தற்போது நிலவி வருகின்ற விஞ்ஞான மற்றும் கணித பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அந்தவகையில், குறித்த பாடங்களுக்கான ஆசிரிய உதவியாளர்களை வளைய மட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகான பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் H.E.M.W.G.திசாநாயக்கா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான விஞ்ஞான, கணித ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்த போதிலும் பல்கலைக்கழகமோ அல்லது கல்வியல் கல்லூறிகளுக்கோ அனுமதி கிடைக்கப்பெராதவர்களை சேர்த்துக்கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், குறித்த மாணவர்கள் அவர்களது இசட் புள்ளியின் அடிப்படையிலேயே முன்னுரிமை வழங்கப்பட்டு, மாகாணத்திலுள்ள வளைய மட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு கிழக்கு மாகான சபை தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், தகைமை உள்ள விண்ணப்பதாரிகள் கீழ் குறிப்பிடப்படும் தினங்களில் நிரந்தர வதிவிட மாவட்டத்தில் குறித்த இடத்தில் நடைபெறும் நேர்முகப் பரீட்சைகளுக்கு சமூகமலிக்குமாஉ மாகான பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட பரீட்சாத்திகளுக்கு இம்மாதம் 20ம் திகதி மாகான பொதுச் சேவை ஆணைக்குழு அலுவலகத்திலும், அம்பாறை மாவட்ட சிங்கள மொழி மூல பரீட்சாத்திகளுக்கு 11ம் திகதி அம்பாறை ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும், அம்பாறை மாவட்ட தமிழ் மொழி மூல பரீட்சாத்திகளுக்கு 23ம் திகதி கல்முனை வளையக் கல்வி அலுவலகத்திலும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மொழி மூல பரீட்சாத்திகளுக்கு 24ம் திகதி மட்டக்களப்பு வளையக் கல்வி அலுவலகத்திலும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
_எம்.ஆர்.ஏ. நிஷா_
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, October 16, 2014
கிழக்கு மாகான ஆசிரிய உதவியாளர் தெரிவுக்கு நேர்முகப் பரீட்சை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply