blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, August 14, 2014

இலங்கையின் இரகியங்கள்: இராஜபக்ச அரசாங்கம் எப்படி படுகொலைகளை புரிந்த பின் தப்பியது” - Trever Grand

இலங்கையின் இரகியங்கள்: இராஜபக்ச அரசாங்கம் எப்படி படுகொலைகளை புரிந்த பின் தப்பியது”-trever grand:- வரலாறு நெடுகிலும் இனப்படுகொலை புரிந்தவர்கள் வெடிகுண்டுகளையும் சித்திரவதை கூடங்களையும் நம்பியது போன்று தங்களது பிரச்சாரங்களையும் நம்பி இருந்திருக்கின்றனர்.
தேசமொன்றின் மக்களையும் கலாச்சாரத்தையும் தங்களது நடவடிக்கை மூலமாக அழிக்க வேண்டிய தேவை அவர்களுக்கிருந்த அதேவேளை தங்களை நியாயப்படுத்த வேண்டிய தாங்கள் செய்ததை மறுக்க வேண்டிய, மறைக்க வேண்டிய தேவையுமிருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபடும் போதும் அதன் பின்னரும் இதனை செய்ய வேண்டியிருந்தது.

வரலாற்றை அழிக்க வேண்டிய கட்டாய தேவையும் அவர்களுக்கிருந்தது.

இந்தக் குற்றங்கள் காரணமாக துயரப்படுவோரிற்கும், ஒரு நாள் நீதியை நிலை நாட்ட முயல்வோருக்கும் உள்ள மிகக் கடினமான சவால் என்னவென்றால் இந்த குற்றவாளிகளால் உண்மை மறைக்கப்படாமல் காப்பாற்றுவதே.

18 மாதங்களுக்கு முன்னர், 2009 இல் முடிவடைந்த இலங்கையின் உள் நாட்டு யுத்தத்தின் போது 70 000 ம் தமிழர்களை அந்த நாட்டு அரசாங்கம் கொன்று குவித்த பாரிய குற்றத்தை உலகம் மறக்காமல் இருக்கச் செய்வதற்கான நடவடிக்கையை நான் ஆரம்பித்தேன். 

அந்த அரசாங்கம் அதன் பின்னரும் தமிழருக்கு எதிரான இன அழிப்பை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

என்னுடைய இந்த முயற்சி இப்போது மக்களின் பார்வைக்காக புத்தகமாக வெளிவந்துள்ளது. 
புத்தகத்தின் பெயர் ~~இலங்கையின் இரகியங்கள்: இராஜபக்ச அரசாங்கம் எப்படி படுகொலைகளை புரிந்த பின் தப்பியது” 

பல மாதங்களாக தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் உரையாடி வடக்கு கிழக்கில் உள்ள அவர்களது தமிழர் தாயகத்தில் ( யுத்தத்தின் பின்னர் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது) அவர்கள் அனுபவித்த பயங்கரங்கள் குறித்த கதைகளை கேட்டறிந்ததன் பின்னரே இந்த நூல் வெளிவருகிறது.


பாதுகாப்பு வலையம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் அப்பாவித் தமிழர்கள் கொன்றழிக்கப் பட்டதையும்  அதிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் பின்னர் மனிக் பாம் தடை முகாமில் எதிர்கொண்ட    மரணங்களையும் துயரங்களையும் நேரில் அனுபவித்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் வழங்கிய 400 இற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மேலே குறிப்பிடப்பட்ட துயரம் நிறைந்த கதைகளுக்கு வலு சேர்க்கின்றன.

இந்தப் புகைப்படங்கள் இனப் படுகொலைக்கான உறுதியான ஆதாரங்கள் மாத்திரமல்ல. 

அவை இறுதி நாட்களில் என்ன நடைபெற்றன என்று மாத்திரம் சொல்லவில்லை. மாறாக அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் செயற்பாடுகளையும் தோலுரிக்கின்றன. 

துன்புறுத்தலுக்குள்ளான தமிழர்கள் அங்கிருந்து தப்பியோடிவருவதை தடுப்பதற்காக அவுஸ்திரேலியா அந்த ஈவிரக்கமற்ற அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகிறது.

இந்த நூலிற்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ள தமிழ் புகைப்படக் கலைஞர்களுக்கு நான் நன்றி உடையவனாக உள்ளேன்.

மே 18 இல் இறுதியாக துப்பாக்கிகள் மௌனமாகி போதும் இலங்கைத் தமிழர்கள் மீதான யுத்தம் தொடர்கிறது. 

இதன் காரணமாக யுத்தக் குற்றத்தை உலகிற்கு காட்டுவதற்காக கடும் விமான தாக்குதல்களையும், ஷெல் வீச்சையும் மீறி இந்தப் புத்தகத்தில் உள்ள நூற்றுக் கணக்கான படங்களை எடுத்தவர்களும், உயிர் தப்பியவர்களும் 5 வருடங்களுக்கு பின்னரும் தங்களை இனம் காட்ட முடியாத நிலையில் உள்ளனர்.

தங்களை வெளிப்படுத்துவதால் ஏற்படக் கூடிய அபாயம் குறித்த அச்ச உணர்வு 2014 இல் இலங்கை எவ்வாறு இருக்கிறது என்பதை சொல்கிறது. 

சித்திரவதைகளும் காணாமல் போதலும் வல்லுறவுகளும் சிறைத் தண்டனையும் துன்புறுத்தல்களும் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வில் அன்றாடப் பகுதியாகி விட்டன.

இவர்கள் தங்களுடைய பணியை தங்களை இனம் காட்டாமலே வெளி உலகிற்கு தெரிவிக்க வேண்டி உள்ளது. 

மஹிந்த அரசாங்கத்தின் உண்மையை பதிவு செய்தவர்கள் எவ்வாறு துயரங்களை அனுபவிப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. 

காக்கி உடை அணிந்த சித்திரவதைக் காரர்களால் பாலியல் வல்லுறவாளர்களால் கொலை காரர்களால் தங்களை எதுவும் செய்ய முடியாவிட்டாலும் தங்கள் குடும்பத்தினரை அவர்கள் துன்புறுத்துவார்கள் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் துணிச்சல் காரணமாகவும் கூட்டு முயற்சியாலும் உண்மையை படமாகவும் வார்த்தைகளாகவும் பதிவு செய்துள்ள புத்தகம் ஒன்று வெளிவருகிறது. 

இலங்கை அரசாங்கம் இந்த சாட்சிகள் குறித்தே அதிகளவு அச்சம் கொண்டிருந்தது கொகாண்டுள்ளது. இதன் காரணமாகவே இறுதி யுத்தத்தின் போது அது வெளி உலகை அங்கிருந்து அகற்றுவதற்கான கடும் முயற்சியை மேற்கொண்டது.

ராஜபக்சாக்களின் சாட்சியமற்ற யுத்தத்தின் முழுமையான கொடூரம் தமிழ் இனப் படுகொலையும் தற்போது எங்களுக்கு முழுமையாக பகிரங்கமாகி உள்ளது. 
 
இதன் மூலமாகஉண்மைக்கும் நீதிக்குமான தேடல் ஒரு நாள் வெற்றி அடைவதை உறுதிசெய்துள்ளது.


உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.      

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►