blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, August 14, 2014

இலங்கையில் வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், திருப்பி அளிக்கத் திட்டம்

இலங்கையில் வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், திருப்பி அளிக்கத் திட்டம்:-வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு இலங்கையில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டத்தை மீளவும், அளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பல்கலைக்கழகமொன்றினால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த பல்கலைக்கழகம் உரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒப்பீட்டு சமநிலை மருத்துவம் தொடர்பிலான சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தினால் இந்த கௌரவ கலாநிதிப் பட்டம் 2006ம் ஆண்டு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேரில் சென்று பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த டாக்டர் பட்டம் அளிக்கும் நிகழ்வின் பிரதம அதிதியதாக ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய இந்த டாக்டர் பட்டத்தை மீள அளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வாழும் கலைப் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபஞ்ச மருத்துவ துறையின் அடிப்படையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு இந்த கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த பல்கலைக்கழகம் முகவர்களின் ஊடாக பணத்திற்காக பட்டம் மற்றும் கௌரவ டாக்டர் பட்டங்களை விற்பனை செய்து வருவதாக அண்மையில் இந்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.       

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►