blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, August 1, 2014

ஜப்பான் வெளியுறவு அமைச்சினால் வழங்கப்படும் விருது இம்முறை இலங்கையருக்கு!

2014 ஆம் நிதியாண்டிற்கான வெளியுறவு அமைச்சர்களின் பாராட்டு பெறும் பட்டியல் கடந்த 24 ஆம் திகதி ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்கான பாராட்டு பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப கலாசார சங்கத்தின் துணைப்பணிப்பாளர் மற்றும் இலங்கை தனியார் துறைகளின் மூத்த நிர்வாகத்துறையாளர் லால் டி அல்விஸ் பாராட்டு பெறும் பட்டியலில் கௌரவிக்கப்படவுள்ளதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பட்டியல் ஒவ்வொரு வெளியுறவு அமைச்சர்களினதும் அடைவு மட்டம் தனிப்பட்ட ரீதியிலும் குழு ரீதியிலும் அவரவர்களால் சர்வதேச அளவில் பெற்றுக் கொண்ட சாதனைகள், அடைவு மட்டங்களை வைத்து நிர்ணயிக்கப்படும்.

ஜப்பானுக்கும் மற்றைய நாடுகளுக்குமிடையேயான நட்புறவினை பாராட்டும்  பொருட்டு அவர்களின் இத்தகைய பங்களிப்பு அளப்பரியதொன்றாகும்.

இலங்கையர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வாய்ப்புக்களை ஆசிய கலாச்சார சங்கங்களினூடாக வழங்கும் பொருட்டு 1965 இல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தில் அல்விஸ் முன்னோடியாகச் செயற்பட்டு தனது உயரிய சேவைகளை வழங்கியுள்ளார்.

அல்விஸ் தனது முன்னோடியான டயஸ் அபயசிங்கவுடன் இணைந்து நிர்மாண வேலைகளில் ஈடுபாட்டுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இச்சேவையின் மூலம் ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப கலாசார சங்கம் முன்னேற்றமடைந்தது என்றால் மிகையாகாது.

1976 ஆம் ஆண்டில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த அல்விஸ் 2011 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க சர்வதேச பயிற்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொழில்முறை ராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்கள் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக 2009 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையான 02 வருடங்கள் பணியாற்றினார். இலங்கையின் கூட்டு வர்த்தக சபைகளின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முகாமைத்துவ பணிப்பாளராக பல்வேறுபட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்  நொபுகிரோ ஹோபோ ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சார்பில் டி அல்விஸ்க்கான உயரிய விருதினை கொழும்பு தூதுவர் இல்லத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவத்தில் வைத்து வழங்கி கௌரவப்படுத்தவுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►