அசாம் மாநிலத்தில் இளம்பெண்ணை தூக்கிலிட்ட காணொளியை போடலாந்து தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து போடலாந்து தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களது கும்பலை சேர்ந்த கும்பலில் 5 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, சிராங் மாவட்டத்தில் தகவல் கொடுப்பவராக செயல்பட்ட இளம் பெண் ஒருவரை போடலாந்து தீவிரவாதிகள் தூக்கிலிட்டதுடன், அந்த காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த காணொளியில் தீவிரவாதிகள் கூறியதாவது, நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதால் நாங்கள் இந்த கொலையை அரங்கேற்றினோம் என்றும் எங்கள் வீரர்களை கொன்றால் இதேபோல் மற்றவர்களை கொல்வோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply