வடமாகாணத்தில் நயினாதீவு, ஊர்காவற்றுறை, அனலைதீவு உட்பட நாடெங்கும் 2 ஆயிரத்து 870 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
தனது அனுமதியின்றி இந்தப் பரீட்சை வினாத்தாளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வெளியிடுதல், பரீட்சை நிலையக் கண்காணிப்பாளர்கள் அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல், கை மாற்றல், பிரதிகள் எடுத்தல், விற்பனை செய்தல், அச்சடித்தல், பத்திரிகைகளில் வெளியிடுதல் ஆகியவை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக 1960ஆம் ஆண்டின் பகிரங்கப் பரீட்சை சம்பந்தமான சட்டமூலத்தின் 25 ஆம் பிரிவின்படி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply