blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, August 13, 2014

முகநூளில் ஸ்டேடஸ் ? ஆர்பாட்டம்? எதிரான பதாதை தூக்குதல்? இஸ்ரேலை வெற்றி கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.!

Untitledஇன்று உலகில் உள்ள அநேக முஸ்லிம்களின் பேசுபொருளாக இருப்பது இஸ்ரேல் காஸாமீதான ஆக்கிரமிப்பும் அதற்கான எதிர்ப்பு ஆர்பாட்டங்களுமே.

இஸ்ரேலுக்கு எதராக எதிர்ப்பை எவ்வாறெல்லாம் வெளிக்காட்ட முடியுமோ அவ்வாறெல்லாம் வெள்ளிக்காட்டிக்கொண்டிருக்கிறோம்.

எனினும் ஒவ்வொரு தனி நபரும் மாறாதவரை இஸ்ரேல் காஸாமீது அடிப்பதையோ காஸாவில் குழந்தைகள் மரணிப்பதையோ எம்மால் நிறுத்தமுடியாது.

ஆர்பாட்டம் பன்னுவதாலேயோ இஸ்ரேலுக்கு எதிரான பதாதை தூக்குவதனாலேயோ முகநூளில் ஸ்டேடஸ் போடுவதனாலையோ இஸ்ரேலை வெற்றி கொள்ளவும் முடியாது.

இஸ்ரேலின் உற்பத்திகளை பகிச்கரிப்பவர்ளாக நாம் மாறவேண்டும்.

இஸ்ரேலின் ஒவ்வொரு உற்பத்திகளையும் அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம் ஆனாலும் அவைகளை பகிஸ்கரிக்க முடியாதவர்களாக நாம் இருக்கிறோம்.

நான் ஒருவன் மட்டும் ஒரு பெப்சி குடிக்காமல் விடுவதனால் ஒண்டும் ஆகப்போவதில்லை என்ற மனநிலை எம்மத்தியில் இருந்து நீங்காதவரை ஒரு நாளும் எம்மால் இஸ்ரேலை வெற்றி கொள்ள முடியாது.

ஒவ்வொருவரின் மனதிலும் இஸ்ரேலின் உற்பத்திகள் ஹராம் என்று தனக்குத்தானே ஒரு வரையறையை இட்டுக்கொள்ள வேண்டும்.

ஏன் எங்களுக்கு அவைகளை விட்டால் மாற்று குடிபானமோ மாற்று உணவுபண்டங்களோ இல்லாமல் இல்லை ஆனாலும் அவைகளை நம்மால் விடமுடியாமல் எம்மில் அதன் மேல் ஒரு மோகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
அது எமது மனங்களில் ஊறியுள்ளது ஒவ்வொருவரும் மனதளவில் அவைகளை வெருக்காதவரை அவைகளில் இருந்து விடுபட எம்மால் முடியாது.

எவ்வாறு இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டுள்ள ஒரு பொருளை நினைக்கும் போதோ காணும் போதோ எங்கள் மனதில் அருவருப்புத்தன்மை உருவாகிறதோ அதே போல் இஸ்ரேலின் உட்பத்திகளைப் பார்க்கும் போதும் எம்மனதில் நாம் அந்த உணர்வை உண்டாக்கி கொள்ள வேண்டும்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு உற்பத்தியும் எமது காஸா குழந்தைகளின் இரத்தத்தை குடிக்கும் ஆயுதம் என்பதை உணராதவரை எம்மால் அவைகளை பகிஸ்கரிக்கவும் முடியாது அதில் இருந்து விடுபடவும் முடியாது.

இன்ஷா அல்லாஹ் இன்றில் இருந்தாவது ஒவ்வொருவரும் ஒரு இஸ்ரேலின். உற்பத்தி பொருளையாவது பகிஸ்கரிக்க மனதளவில் உறுதி பூணுவோம் அதன் மூலம் வெற்றி கொள்வோம் காஸாவை, மீட்டெடுப்போம் அல்-அக்ஸாவை.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.  

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►