blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, August 6, 2014

அமைச்சர் ராஜித, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவுகிறார்- குற்றஞ்சாட்டும் பொது பல சேனா தேரர்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திடமும் அவர் தொடர்பில் முறையிடவுள்ளதாக பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


இதற்கான போதுமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

அண்மையில் அளுத்கமையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொது பல சேனாவே காரணம் என்று அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்தே பொது பல சேனா அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகி;றது.

நோர்வே தமது உதவி செய்வதாக அமைச்சர் வெளியிட்ட குற்றச்சாட்டை கலகொட மறுத்தார்.

பொறுப்புள்ள அமைச்சர் ஒருவர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தென்னிலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதி அமைச்சரின் வாகனத் தொடரணி செல்லும் போதே பயணிக்கிறது. அந்த வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது.
 
அதேவேளை புத்தளத்திலும் கடலட்டை ஏற்றுமதி செய்யும் ஒருவர், அமைச்சரின் நண்பராக இருக்கிறார். அவர் அமைச்சர் வெளிநாடு செல்லும் போது செல்கிறார்.

குறித்த வர்த்தகரின் சகோதரர் அண்மையில் போதைப்பொருள் பிரச்சினை ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேவேளை அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை கொண்டிருந்தார் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தினார்.

அத்துடன் அமைச்சர் ராஜிதவை மரியாதை குறைவாகவும் கலகொட அத்தே இந்த செய்தியாளர் சந்திப்பின் போது விமர்சித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►