blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, August 23, 2014

பெண்ணை கெட்ட வார்த்தைகளினால் திட்டியபடி சுவாமிக்கு அர்ச்சனை செய்த பூசகர்!

ஆலயமொன்றில் நவக்கிரகங்களிற்கு அர்ச்சனை செய்யச் சென்ற வயோதிபப்பெண்ணிற்கு அர்ச்சகர் தொந்தரவு செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அர்ச்சனைக்காக ரிக்கெற்றை எடுக்காமல், பணத்தை மட்டும் தன்னிடம் தருமாறு அர்ச்சகர் தொந்தரவு செய்துள்ளார். அர்ச்சகரின் தொந்தரவை சகிக்க முடியாதபெண் கண்ணீர் மல்கியபடி அர்சச்கரின் அடாவடி பற்றி ஆலய நிர்வாகத்திடம் முறையிட்டபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, அந்த ஆலயத்தை விட்டு வெளியேறிய பெண் அருகிலள்ள ஆலயமொன்றில் அர்ச்சனை செய்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் மானிப்பாய் பகுதியிலுள்ள கோவில்ப்பற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுதுமலையைச் சேர்ந்த பெண்ணொருவர் வன்னியிலுள்ள தனது பேரப்பிள்ளைகளிற்காக அரச்சனை செய்ய இந்த ஆலயத்திற்கு சென்றிருக்கிறார்.

அர்ச்சனைக்கான ரிக்கெற்றை எடுத்துக் கொண்டு சென்ற பெண்ணிடம், ரிக்கெற் எடுக்காமல் ரிக்கெற்றிற்குரிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

இருந்த பணத்தில் ரிக்கெற் எடுத்து விட்டதாகவும், அடுத்தமுறை வரும்போது பணம் தருவதாக பெண் கூறியிருக்கிறார். எனினும், பெண்ணின் பின்னால் தொடர்ந்து பணத்தை தருமாறு நச்சரித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

பின்னர் வேறுவழியின்றி ரிக்கெற்றை வாங்கி நவக்கிரக பூசை செய்ய ஆரம்பித்தார். அதனை செய்யும்போது மந்திரமெதுவும் சொல்லவில்லை. பெண்ணை கெட்ட கெட்ட வார்த்தைகளினால் திட்டியபடி தீபம் காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கண்ணீர்விட்டு அழுதார்.

இதனை அவதானித்த மற்ற பக்தர்கள் அவரை ஆலய பொருளாளரிடம் அழைத்துச் சென்றனர். இந்த அதிர்ச்சிக்கதையை கேட்ட பொருளாளர், “அவர் அப்படித்தான்” என்ற சாரப்பட சாவகாசமாக கூறிவிட்டு இடத்தை காலி செய்துவிட்டார்.

இந்த அடாவடி பூசகர் ஆலயத்திற்கு வந்த யுவதியை தாக்கி அத்துமீறி நடக்க முற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்றும் சில காலத்தின் முன் நடந்துள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் இந்த விடயத்தில் தலையிட்டு, பூசகரை ஆலயத்திலிருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இதன்படி வெளியேற்றப்பட்ட அடாவடி பூசகர் ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் ஆலயத்தில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►