அந்த பகுதியில் அபிவிருத்திப் பணிகள் நடப்பதால், சிறிய தேனீர்க் கடையொன்றை அகற்றுமாறு அதிகாரிகள் பணித்தனர்.
ஆனால் அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார். தான் ஒரு ஏழையென்றும், கடையை அகற்றினால் தனது குடும்பம் நடுவீதிக்கு வந்தவிடும் என்றும் கூறிப்பார்த்தார்.
ஆனால் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றிவிடுவதில் ஒற்றைக்காலில் நிற்கும் அதிகாரிகள் விடுவார்களா? கடையை பெயர்த்து எறிந்து விட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வர்த்தகர் நடுவீதியில் படுத்து போராட்டம் செய்தார்.
அவரது போராட்டத்திற்கு அந்த பகுதி பிக்குகளும் ஆதரவு கொடுத்தனர். சுமார் இரண்டு மணிநேரமாக நடுவீதியில் சாகவாசமாக படுத்துவிட்டார்.
பின்னர்தான் அதிகாரிகள் வந்து அவரை சமாதானப்படுத்தி, போராட்டத்தை முடித்து வைத்தனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment
Leave A Reply