போக்குவரத்து
அனுமதிப் பத்திரமின்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக
எதிர்வரும் மூன்று வாரங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய
போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இந்த நடவடிக்கைகளுக்காக பல குழுக்கள் நாடு பூராகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவிக்கின்றார்.
குறிப்பாக
யாழ்ப்பாணம் – கொழும்பு, வவுனியா – கொழும்பு ஆகிய மார்க்கங்களில்,
பயணிக்கும் பஸ்கள், போக்குவரத்து அனுமதி பத்திரமின்றி பயணிக்கின்றமை
குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர்
சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையை தவிர்க்கும் வகையில், தற்காலிக அனுமதிப் பத்திரம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும்,
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம்
ஒருநாள் அனுமதி பத்திரத்தை வழங்க, கொழும்பு – பெஸ்டியன் மாவத்தை பஸ்
தரிப்பிட முகாமையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ரேணுக பெரேரா
கூறினார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply