இந்த அதிர்ச்சி சம்பவம் கொழும்பில் நடந்துள்ளது. தனது மகளின் வாழ்வை சீரழித்த இளைஞன் மற்றும் அவனது குடும்பத்தினர் மீது கத்திக்குத்து நடத்திய யுவதியின் தந்தை தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்.
இளைஞனின் தந்தை மரணமாகியுள்ளார். கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய முழு விபரம் இது.
கொட்டாஞ்சேனையில் முத்தையா செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இந்த யுவதி கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்விபயின்று வந்தார். இந்த நிலையில் சில தினங்களின் முன்னர் அவர் பாடசாலை முடிந்தும் குறித்த நேரத்திற்கு வீடு வந்து சேரவில்லை. அவரது கையடக்கத்தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களிலும் தேடுதல் நடத்தினார்கள். மகளின் நண்பிகளின் வீடுகளிற்கு சென்று விசாரித்த சமயத்தில், அவர்களிற்கு ஒரு அதிரச்சி தகவல் கிடைத்தது. அதாவது, இளைஞன் ஒருவருடன் யுவதி காதல் தொடர்பை கொண்டுள்ளார் என்பதே அது.
காணாமல் போன யுவதி மாலைமங்கிய பின் வீடு வந்து சேர்ந்தார். அவர் மிகச் சோர்வாகக் காணப்பட்டார். பெற்றோர் அவரை கண்டிப்புடன் விசாரித்ததில் அதிர்ச்சிக்கதையொன்றை கூறினார். தனது காதலன் தன்னை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்று, ஹோட்டல்அறையொன்றில் வைத்து பாலியல்உறவு கொண்டுவிட்டதாகவும், தன்னை நிர்வாணமாக படம் பிடித்து விட்டதாகவும் யுவதி கூறினார்.
இருவரும் முத்தம் கொடுத்து கொண்ட சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை முகப்புத்தகத்தில் பதிவேற்றப்போவதாக அச்சுறுத்தியே யுவதியை வாகனத்தில் ஏற்றிச் சென்று உறவு கொண்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் அதிகாலையில் யுவதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞன், உடனடியாக பன்னிரண்டாயிரம் ரூபா பணம் தருமாறும் இல்லாவிட்டால் நேற்று எடுத்துக் கொண்ட நிர்வாணப்புகைப்படங்களை இணையத்தளத்தில் பரப்பப் போகிறேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து, யுவதியின் தந்தையான முத்தையா செல்வராஜ் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து, யுவதியை சீரழித்த காமுகனான மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த எடொன் நிரோஷன் (வயது 25) கைது செய்யப்பட்டு கொழும்பு- இலக்கம் 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
நீதிமன்றம், சந்தேகநபரை நேற்று திங்கட்கிழமை 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதன் பிரகாரம் நேற்றைய தினம், நீதிமன்றத்தில் காமுகனை ஆஜர்படுத்தியபோது அவனுக்கு பிணை வழங்கப்பட்டது.
பிணை வழங்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே காமுகன் தனது குடும்பத்துடன் வந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தையான 51 வயதான முத்தையா செல்வராஜ், காமுகனின் தந்தையான 61 வயதான ஜி.ஏ. ஜேசீலன் என்பவரையும் காமகன் எடொன் நிரோஷனையும் சகோதரியான தில்ஷாவையும் (வயது23) கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், இளைஞனின் தந்தை பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் யுவதியின் தந்தையான முத்தையா செல்வராஜ் வாழைத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply