அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் தலை துண்டித்து
கொலைசெய்யப்பட்ட காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ளது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.ஈராக்கில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்த செய்திகளை சேகரிக்க சென்ற ஜேம்ஸ் ஃபோலே (James Foley ) என்ற அமெரிக்க புகைப்பட நிருபரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடித்துள்ளனர்.
ஜேம்ஸின் தலை துண்டிக்கப்படுவது போலான காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கு ஒரு தகவல் என்றத் தலைப்பு வரும் இந்த காணொளியில், மண்டியிட்டப்படி ஜிகாதிகளுக்கிடையே இருக்கும் ஜேம்ஸ் பேசியதாவது, எனது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் என்னை கொல்பவர்களுக்கு எதிராக எழ வேண்டும்.

இவர்கள் என்னை கொல்வதனால் ஏற்படும் கொடூரத்தை கொண்டு தன்னிறைவு அடைய எண்ணுகிறார்கள். உங்களது சகாக்கள் ஈராக்கில் குண்டு மழை பொழிந்தபோதே, எனது இறப்பு சான்றிதழுக்கு இவர்கள் கையெழுத்திட்டுவிட்டனர் என உருக்கமாக பேசியுள்ளார்.
இதனையடுத்து ஜேம்பிசின் கழுத்தைப் பிடித்தபடி தீவிரவாதி ஒருவர் அமெரிக்காவை சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் பேசுகையில், உங்கள் பிரஜை, உங்கள் அரசு, எங்களது இஸ்லாமிக் நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் பலவற்றை செய்துவிட்டன.
நீங்கள் எங்கள் விவகாரத்தில் தலையிட்டு பல இஸ்லாமியர்களை கொன்றதால் எங்களுக்கு எதிரியாகிவிட்டீர்கள்.
நாங்கள் இஸ்லாமிய போராளிகள், எங்களது இஸ்லாமிய கலிப்பேட் கோரிக்கைக்கு, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களின் ஆதரவு உள்ளது. எனவே உங்களது முயற்சிகள் முறியடிக்கப்படும்.
மேலும் எங்களது தனிநாடு போராட்டத்தில் குறுக்கிட்டால் உங்களை இரத்தத்தில் மூழ்கடிப்போம் எனக் கூறி ஜேம்சின் தலையை துண்டித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply