blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, August 12, 2014

எபோலா வைரஸ் தாக்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட மருத்துவ குழு

எபோலா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக லைபீரியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ள 200 இலங்கை தொழிலாளர்களை கட்டுநாயக்க விமானத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக விசேட வைத்தியர்கள் குழு விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லைபீரியாவில் இருந்து வரும் இலங்கை தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவர்கள், பொது சுகாதார அதிகாரிகள், தாதியர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் சுதர்மா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், இருமல், தடிமன் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் விசேடமாக தயார் செய்யப்பட்ட அம்புலன்ஸ் வண்டி மூலம் காய்ச்சல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►