உலகக்
கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி
அணி பிரேஸில் அணியினை 7-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்
போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் ஆரம்பம் முதலே ஜேர்மனி
அணியின் ஆதிக்கம் மேலோங்கியே காணப்பட்டது. வீ்ரர்களின் ஆக்ரோஷமான
ஆட்டத்தினை எதிர்கொள்ள முடியாது பிரேஸில் அணி வீரா்கள் திணறினர்.
நட்சத்திர வீரர் நெய்மர், தலைவர் தியாகோ சில்வா இன்றைய போட்டியில் பங்கேற்காமை பிரேஸில் அணிக்கு பாரிய பின்னடைவாகவே அமைந்தது.
போட்டியின் 11ஆவது நிமிடத்தில் ஜேர்மனி அணியின் முல்லர் முதல் கோலை போட்டு அணியின் கோல் எண்ணிக்கையை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேர்மனி அணியின் குளோஸ் 23ஆவது
நிமிடத்திலும், 24ஆவது நிமிடத்தில் டொனி குரூசும், 26 ஆவது நிமிடத்தில்
மீண்டும் டொனி குரூசும், 29 ஆவது நிமிடத்தில் ஹேரிடாவும் கோல்களை
பெற்றுக்கொள்ள ஜேர்மனி ஆட்டத்தின் இடைவேளையின் போது 5-0 என்ற ரீதியில்
முன்னிலை பெற்றிருந்தது.
தொடர்ச்சியாக ஜேர்மனி கோல் அடித்து ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க, அதிச்சியில் உறைந்து போயினர் பிரேஸில் அணியினர்.
ஆட்டத்தின்
இரண்டாவது பகுதியிலும் ஜேர்மனி அணியினர் மேலும் இரு கோல்களை பெற்றுக்
கொள்ள 7-0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றிருந்தது.
வரலாற்று தோல்வியை
சந்தித்த பிரேஸில் அணிக்கு ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் ஒஸ்கார்
கோலொன்றைப் பெற்றுக்கொடுத்து ஆறுதல் அளித்தார்.
உலகக் கிண்ண போட்டி
வரலாற்றில் எந்தவொரு அணியும் இவ்வாறு படுதோல்வி ஒன்றினை இதற்கு முன்னர்
சந்தித்ததில்லை கால்பச்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
பல
மில்லியன் டொலர்கள் செலவில், சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகக் கிண்ண
போட்டியை நடத்திய பிரேஸில் இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்துள்ளதை அடுத்து,
தேசமே சோகத்தில் ஆழ்ந்துவிடும் என்று வர்ணனையாளர்கள் கூறினர்.
பெலோ
ஹரிசாண்டேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அரங்கு முழுவதும் ரசிகர்கள்
குழுமியிருந்த நிலையில், அது பிரேஸிலுக்கு பெரிய ஆதரவாக இருக்கும் என்று
போட்டிக்கு முன்னர் கருதப்பட்டது.
எனினும்
இவ்வளவு பெரிய தோல்வியை அந்த அணி அடைந்திருந்தாலும், போட்டிக்கு பிறகு
பிரேஸிலின் பயிற்சியாளர் லூயி ஃபெலிப்பே ஸ்கொலரி, மைதானத்துக்கு சென்று
ஜேர்மனி அணியின் வீரர்களை பாராட்டியது மிகவும் கண்ணியமான ஒரு செயலாகப்
கருதப்படுகிறது.
இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள ஜேர்மனி இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெரும் அணியுடன் 13ஆம் திகதி மோதவுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, July 9, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply