blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, July 15, 2014

அளுத்கமை எதை உற்பத்தி செய்யும் என எமக்கு தெரியுமா? - தயான் ஜெயதிலக எச்சரிக்கை

கடும்போக்கு சிங்கள பெளத்த அமைப்புகளை கையாள்வதில் அரசாங்கம் விடும் பெரிய மூலோபாய  தவறு ஆயுதம் தரிக்கும் முஸ்லிம் இளைஞர்களை  உருவாக்களாம் என முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான  தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள ஆக்கம் ஒன்றில் ,இலங்கை அரசாங்கம் இரண்டாவது பெரிய மூலோபாய தவறை செய்து வருகிறது. அந்த தவறு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு  பிரிந்து செல்வதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.   

அந்த தவறு தேசிய நீரோட்டத்தில் இருந்து முஸ்லிம் சமூகம் தனிமைப்படுத்த பொது பல சேனா , சிங்கள ராவைய ,ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றுக்கு  அனுமதி வழங்கியதாகும் . இந்த தவறு குறைந்த பட்சம் நான்கு தீவிரமான  சேதத்தை  விளைவிக்ககூடும் 

ஒன்று : இந்த தவறு நாட்டின் ஆயுத படைகளிலும் பொதுவில்   அரச நிர்வாகத்தில் இருக்கும்  முஸ்லிம் அதிகாரிகளின் உணர்வுகளை புண்படுத்தும்.

இரண்டு: இது கிழக்கு மாகாண முஸ்லிம்களை சிங்களவர்கள் மற்றும் இலங்கை அரசின் இருந்து தூரப்படுத்தி தமிழ் தேசிய வாதிகளின் பக்கம் தள்ளும் இது தமிழ் பேசும் மக்கள் என்ற கோசத்தை மேலோங்க செய்து ஒருமைப்பட்ட வடக்கு -கிழக்கு அரசியல் நிறுவனத்தைகோரும்.

மூன்றாவது: இந்த தவறு   தங்கள் வீடுகள், சொத்துக்கள்  மற்றும் குடும்பங்கள் காக்க முயற்சிக்கும் ஆயுதம் தரிக்கும் முஸ்லிம் இளைஞர்களை  உருவாக்கும் . இந்த உருவாக்கம் அரசாங்கத்துக்கு  எதிரான ஒரு புதிய களத்தை திறக்கும்.

நாங்காவது: இந்த தவறு வெளி அரங்கில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது சக்தியை  உருவாக்கும் . தமிழ் புலபெயர் அமைப்புக்கள் , மேற்குலகம் , தமிழ் நாடு ஆகியவற்றுடன் இஸ்லாமிய உலகின் சக்திகளும் இணைத்து கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
1958 தமிழர் விரோத கலவர சூழ்நிலை பிரபாகரன், புலிகள், மற்றும் முதல் தலைமுறை புலம்பெயர் தமிழர் அமைப்பு ஆகியவற்றை உற்பத்திசெய்தது அளுத்கமை எதை உற்பத்தி செய்யும் என எமக்கு  தெரியுமா?

பல தசாப்தங்களாக,  அரசாங்கத்தின் உள்ளும்  வெளியேயும் சிங்களம் பெளத்த பேரினவாதம் மிதமான தமிழ் தேசியவாதிகளான தமிழரசு கட்சி போன்ற தமிழ் கட்சியை வெளித் தள்ளியது  அதன் காரணமாக பயங்கரவாதம் வலுப்படுத்தப் பட்டது.

உலகில் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் உள்ளன.உலகில்  80 மில்லியன் தமிழர்கள் உள்ளனர் , அந்த சமூகத்தின் ஆதரவுடன் நிகழ்த்த பயங்கரவாததுடன் 30 ஆண்டுகள் யுத்தம் நடந்தது உலகில் ஒரு பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர் . 

அவர்களின் ஆதரவுடன் கூடிய ஒரு பயங்கரவாதத்துடன் போராட எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் ? தற்கொலை தாக்குதலை கண்டு பிடித்தவர்கள் புலிகள் அல்லர் அதை கண்டு பிடித்தது இஸ்லாமிய மத்திய கிழக்கு புலிகளின் மில்லர் தற்கொலை தாக்குதல் நாடாத்துவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னேரே பெய்ரூத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் காரணமாக அமெரிக்க படைகள் வெளியேறியது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►